dinamalar telegram
Advertisement

சிகிச்சையில் கார்ட்டூனிஸ்ட் பத்மஸ்ரீ விருது ஒப்படைப்பு

Share
கோல்கட்டா-பிரபல 'கார்ட்டூனிஸ்ட்' நாராயண் தேப்நாத்விடம் அவருக்கான பத்மஸ்ரீ விருதை, மேற்கு வங்க மாநில அமைச்சர் அரூப் ராய் வழங்கினார்.

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் நாராயண் தேப்நாத், 97. இவர் கார்ட்டூன் உலகில் புகழ் வாய்ந்த 'பத்துல் தி கிரேட்'' மற்றும் 'நான்டே பேன்டே' போன்ற கற்பனை பாத்திரங்களை உருவாக்கியர்.முதுமை காரணமான உடல் பாதிப்புகளால் நாராயண் கடந்த ஒரு ஆண்டாக கோல்கட்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவருக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாநில கூட்டுறவு அமைச்சர் அரூப் ராய் மற்றும் உள்துறை செயலர் பி.பி.கோபாலிகா ஆகியோர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement