dinamalar telegram
Advertisement

மீதமான உணவை பரிமாறி... பசி போக்குகிறார் பத்மநாபன்!

Share
Tamil News
கடந்த ஏழு ஆண்டுகளில், ஒன்றல்ல, இரண்டல்ல 97 லட்சம் உணவுகள், வீணாவதை தடுத்து, பசித்தோருக்குச் சென்றடைய உதவியிருக்கிறார் கோவையை சேர்ந்த இளைஞர் பத்மநாபன்.கல்லுாரியில் பயிலும்போது, திருமண நிகழ்வொன்றில், ஏராளமான உணவு வீணானதைப் பார்த்தவருக்கு, மனது பிசைந்தது. ஒருவேளை உணவு கிடைக்காமல் பசித்தவர்கள் காத்திருக்க, இத்தனை உணவும் வீணாகிறதே என ஆதங்கம். பசித்தோரையும், வீணாகும் உணவையும் இணைக்க, நண்பர்களுடன் இணைந்து, 2014ல் இவர் எடுத்த முயற்சிதான், 'நோ புட் வேஸ்ட்' அமைப்பு.20 நகரங்களில் கிளை!கோவையில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, ஹைதராபாத், விஜயவாடா, தடேபள்ளிகுடம் என, தென்னிந்தியாவில் 20 நகரங்களில் கிளை பரப்பியிருக்கிறது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், ஓட்டல்கள், பார்ட்டிகள் என, எங்கெல்லாம் உணவு பரிமாறப்படுகிறதோ, அங்கிருந்து இவர்களின் சேவை தொடங்குகிறது.இந்நிகழ்வுகளில் எஞ்சியிருக்கும், கைபடாத உணவு பெற்று, தேவைப்படுவோருக்கு பகிர்ந்தளித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் மட்டும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 569 பேருக்கான உணவை வினியோகித்துள்ளனர். கோவை மாவட்டத்தில், கடந்தாண்டில் மட்டும் 2 லட்சத்து 72 ஆயிரத்து 560 உணவுகள் வினியோகித்துள்ளனர்.ஊரடங்கில் கம்யூனிட்டி கிச்சன்!கொரோனா ஊரடங்கின்போது, கம்யூனிட்டி கிச்சன் உருவாக்கி, உணவு சமைத்து இயலாதோருக்கு வினியோகித்தனர். மருத்துவ உபகரணங்கள் வழங்கல், காய்கறி வழங்குதல் என, சேவையை விரிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுதும் இதுசார்ந்து இயங்கும் 83 அமைப்புகளை ஒருங்கிணைத்துள்ளனர்.'நோ புட் வேஸ்ட்' அமைப்பின் சேவையை பாராட்டும் விதமாக, ஐ.நா.வின் பொருளாதார சமூகக் குழு (எகோசாக்), 'சிறப்பு ஆலோசகர்' அங்கீகாரம் அளித்துள்ளது.இதுதொடர்பாக, பத்மநாபனிடம் பேசினோம்...அனைவருக்கும் உணவு என்ற இலக்கில், உற்பத்தியான தானியங்கள், சமைக்கப்பட்ட உணவுகளை வீணாக்காமல் பயன்படுத்தினாலே, இலக்கில் பாதியை எட்டி விடமுடியும். உற்பத்தியாகும் உணவுகளில், 40 சதவீதம் வரை உணவுத்தட்டுக்கு வராமலேயே வீணாகிறது. இதை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைப்பதே நமது இலக்கு. 2019ல், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா., நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது, ஐ.நா.வின் எகோசாக், நம்மை சிறப்பு ஆலோசகராக அங்கீகரித்து, கடந்த டிசம்பரில் அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ஐ.நா.வோடு இணைந்து செயல்பட இது பெரும் வாய்ப்பு.இவ்வாறு, பசி போக்கும் தகவல்களை பரிமாறுகிறார் பத்மநாபன். தற்போது 500 தன்னார்வலர்கள் நம்மோடு இணைந்து செயல்படுகின்றனர். நம் நாட்டில் தயாரிக்கப்படும் உணவில், 40 சதவீதம் வரை உணவுத்தட்டுக்கு வராமலேயே வீணாகிறது. இதை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைப்பதே நமது இலக்கு. 2019ல், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா., நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது, ஐ.நா.,வின் எகோசாக், நம்மை சிறப்பு ஆலோசகராக அங்கீகரித்து, கடந்த டிசம்பரில் அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ஐ.நா.வோடு இணைந்து செயல்பட இது பெரும் வாய்ப்பு.உணவு வேஸ்ட் ஆகிறதா...கூப்பிடுங்க: 90877 90877உணவு மிஞ்சும் என நினைத்தால், 'நோ புட் வேஸ்ட்' அமைப்பைத் தொடர்பு கொண்டால், 50 அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கான உணவு இருப்பின், நேரில் வந்து உணவைப் பெற்றுக் கொள்கின்றனர்.அதைவிட குறைவாக இருப்பின், அந்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு மிக அருகிலுள்ள, உணவு தேவைப்படும் மையங்கள் குறித்த விவரத்தை அளித்து, அங்கு, அந்த உணவு சென்று சேர்வதை உறுதி செய்கின்றனர்.இதற்காக, 'ஹங்கர் மேப்' எனப்படும், பசி வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள, ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் என, உணவு தேவைப்படும் பகுதிகள் குறித்த விவரங்களைத் துல்லியமாக சேகரித்து வைத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement