dinamalar telegram
Advertisement

மக்களின் குறைகளை தீர்க்க வாரத்தில்... 3 மணி நேரம்  ஒதுக்க மத்திய அமைச்சகங்கள் முடிவு

Share
புதுடில்லி :மக்களின் குறைகளை கேட்கவும், தேங்கிய கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாரத்தில் மூன்று மணி நேரம் ஒதுக்க மத்திய அமைச்சகங்கள் முடிவு செய்துள்ளன. 'சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள் இது தொடர்பாக மாதம் ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்றும், மத்திய நிர்வாக சீர்திருத்தம், மக்கள் குறைகேட்பு துறை உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் சார்பில் கடந்த அக்., 2 முதல் 31ம் தேதி வரை துாய்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அந்த ஒரு மாதத்தில் அலுவலகங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேவையற்ற பொருட்கள் விற்கப்பட்டதில் 62.54 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்தது.
தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டதில் 20 கால்பந்து மைதானங்களுக்கு சமமாக, 12.01 லட்சம் சதுர அடி இடமும் கிடைத்தது.அலுவலகங்களும் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. இந்த நடவடிக்கையை ஆண்டுதோறும் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் டி.ஏ.ஆர்.பி.ஜி., எனப்படும் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைகேட்புத்துறை சார்பில் மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு சமீபத்தில் அனுப்பிய கடித்ததில் கூறியிருப்பதாவது:
அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நடவடிக்கை எடுக்கப்படாமல் கோப்புகள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. அதேபோல் மக்களின் குறைகேட்பு நிகழ்ச்சிகளும் முறையாக நடத்தப்படுவதில்லை.
அதனால் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் வாரத்துக்கு குறைந்தது மூன்று மணி நேரமாவது கட்டாயம் இதற்காக ஒதுக்க வேண்டும்.அப்போது மக்களின் குறைகேட்டல், தேங்கிய கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அனைத்து துறைகளின் செயலர்களும் மாதம் ஒரு முறை இந்த பணியில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜன.4ம் தேதி மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா அனைத்துத்துறை செயலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், 'டி.ஏ.ஆர்.பி.ஜி.,யின் ஆலோசனையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அமைச்சகங்கள் வாரத்துக்கு மூன்று மணி நேரம் ஒதுக்கி கோப்புகள் தேங்க விடாமல் தடுக்கவும், மக்களை குறைகளை கேட்கவும் முடிவு செய்துள்ளன. அடுத்த மாதம் முதல் இந்த நடவடிக்கை துவக்கப்படும்.
இதற்காக ஒவ்வொரு துறையிலும் தனி அதிகாரியை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக இரண்டு மாதங்களுக்கு வாரத்துக்கு மூன்று மணி நேரம் ஒதுக்கப்படும்.இதன் வெற்றியை பொறுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
மத்திய அமைச்சகங்கள், துறைகளில் துாய்மை பணியையும் அடிக்கடி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • Vilva Nathan -

  0 ...

 • ஆரூர் ரங் -

  ஒரு மத்திய அமைச்சகம் கணினிமயமாக்கப்பட்ட பின் அலுவலர்கள் மேலதிகாரியிடம் சென்று பழைய காகிதக் கோப்புக்களை என்ன செய்வது என்று யோசனை கேட்டனர். பதிலாக அவர் கூறியது. எல்லாவற்றையும் குப்பையில் போடுங்க. ஆனால் அதற்கு முன் அவற்றின் நகல்களை எடுத்துக் கொண்டு பின்னர் தூக்கி போடுங்க என்றார். (புரிஞ்சவன் பிஸ்தா😉😉)

 • rajan - erode,இந்தியா

  .அலுவலகங்களும் சுத்தமாக காட்சி அளிக்கின்றன எல்ல கோப்புகளையும் அரசு துறையையும் தனியாருக்கு விற்றுவிட்டால் இன்னும் சுத்தமாக இருக்கும் இடமும் மீதமாகும்

 • rajan - erode,இந்தியா

  அலுவலகங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேவையற்ற பொருட்கள் விற்கப்பட்டதில் 62.54 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்தது. தேவையற்ற பொருட்களாக கோப்புகளை விற்றுவிடலாம் காகிதமில்லா நிர்வாகம் என்று சொல்லலாம்

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஆக இதுவரை மக்கள் குறை என்ற ஒன்று அரசு அகராதியில் இல்லை போலும். தினமும் பாதி நேரம் ஒதுக்குவதை விட்டுவிட்டு அது என்னய்யா வாரத்திற்கு வெறும் மூன்று மணி நேரம்?

  • raja - Cotonou,பெனின்

   இந்தியா சுகந்திரம் அடைந்ததில் இருந்து 70வருசமா ஆண்ட காங்கிரசு திமுக கூட்டணி ஆச்சிகளில் கூட இல்லைங்கிறததுதான் உங்கள் வருத்தமாக தெரிகிறதே... எதோ இவர்களாவது நேரம் ஒதுக்குகிறார்கள் என்று சந்தோச படுங்க....

Advertisement