dinamalar telegram
Advertisement

கங்கை நதியில் 3.5 லட்சம் பேர் புனித நீராடல்

Share
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் மகர சங்கராந்தியை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 3.5 லட்சம் பேர் கங்கை நதியில் புனித நீராடினர்.
மேற்கு வங்கத்தில் மகர சங்கராந்தி விழா இன்று (ஜன.14)விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று (ஜன.14) அதிகாலை கங்கை நதியில் சூரிய உதயத்தின்போது, ஏராளமான மக்கள் புனித நீராடினர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புனித நீராட வந்த மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்தி இருப்பதற்கான சான்றிதழும், கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழும் எடுத்து வந்தவர்களுக்கு மட்டுமே கங்கையில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கங்கை நதியில் 3.5 லட்சம் மக்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • கௌடில்யன் - Chennai ,இந்தியா

    ....

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மனிதர்களின் பாவங்களைப் போக்கும் புனிதநதி கங்கை என்பது காலம் காலமாக ஹிந்துக்களின் நம்பிக்கை .மறைந்த ஒரு நாத்திகத்தலைவருக்கு காரியங்களை அவரது மருமகள் கங்கையில் செய்ததாக செய்திகள் உண்டு

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ...

    • Muruga Vel - Mumbai,இந்தியா

      வாரம் ஒரு தடவ குளியல் பண்ணறவங்க கருத்து போடாம இருக்கிறதே நல்லது ..

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்