dinamalar telegram
Advertisement

கோவிட் உயிரிழப்பு வதந்தி: சுகாதாரத் துறை முற்றுப்புள்ளி

Share
புதுடில்லி : கோவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மத்திய சுகாதாரத் துறை திட்டவட்டமாக மறுத்தது.
நம் நாட்டில் கோவிட் முதல் அலையைக் காட்டிலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டாம் அலையின்போது அதிகம் பேர் உயிரிழந்தனர்.இதற்கிடையே தற்போது மூன்றாம் அலையும் வேகமெடுத்துள்ளது. இதுவரை 4.85 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர்.எனினும் நம் நாட்டில் கணக்கில் காட்டப்பட்டதை விட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதை மத்திய அரசு மறைத்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.


இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் கோவிட்டால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டியதாக வெளியாகும் ஊடக செய்திகளில் உண்மை இல்லை; அது தவறான தகவல்.நம் நாட்டில் பிறப்பு மற்றும் இறப்பு சார்ந்த விபரங்களை வெளியிடும் நடைமுறைகள், வெளிப்படைத் தன்மையுடன் நடந்து வருகின்றன. உண்மையான தகவல்கள் மட்டுமே மத்திய அரசால் வெளியிடப்பட்டு வருகின்றன.அனைத்து நடைமுறைகளும், இந்திய தலைமை பதிவாளரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. எனவே அதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்