dinamalar telegram
Advertisement

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்:முப்படை விசாரணை அறிக்கை தாக்கல்

Share
குன்னூர்: திடீரென திரண்ட மேக கூட்டங்களால், முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெ லிகாப்டர் விபத்திற்குள்ளானதாக முப்படை விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் கடந்தாண்டு டிச. 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற போது குன்னூர் அருகே விபத்தில் சிக்கியதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பலியாயினர்.

விபத்து குறித்து முப்படைகளின் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில் மோசமான வானிலை காரணமாக திடீரென திரண்ட மேக கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் புகுந்ததால், இந்த விபத்து ஏற்பட்டது. தவிர இயந்திர கோளாறு, தொழில்நுட்ப கோளாறு காரணம் அல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • நல்லவன் - chennai,இந்தியா

    ....

  • Amal Anandan - chennai,இந்தியா

    அப்போ வன்மத்தை பரப்பிய அயோக்கிய ஆட்களை உள்ளே தூக்கிபோடனும் இல்லையா?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சன் டீவி வேறு விதமாகச்சொல்லுகிறது.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    அப்போ, இந்த YOUTUBE இல் பலபேர் சொன்னாங்க, இது அமெரிக்கா, பாகிஸ்தான், சீனாவின் சதி என்று எல்லாம், அதெலாம் வியாபாரத்துக்கா, அல்லது விசாரணை குழு உண்மையை மறுக்கிறதா?

  • Nagercoil Suresh - India,இந்தியா

    " திடீரென திரண்ட மேக கூட்டங்களால்" இந்த காரணத்தை காட்டி இதுதான் முழு தவறு என கூறி முடித்து விட முடியாது. மலைகளுக்கு மேல் பறக்கும் பொழுது மேகக்கூட்டங்கள் தெரிவித்துக்கொண்டு வருவது கிடையாது, ஓட்டுனருக்கு தெரிந்திருக்கவேண்டும் பூமியிலிருந்து எத்தனை அடிக்கு மேல் விமானம் பறக்கிறது என்பது அதற்காக உடனே மேல்நோக்கி செலுத்துவதை விட்டு விட்டு கீழ் நோக்கி செலுத்தியது தான் தவறு. வீடியோவில் தெரியும்படி பார்த்தால் மலைகளுக்கு மேல் மிகவும் தாழ்வாக பறக்கிறது, இரண்டாவதாக பார்த்தால் மேக்கக்கூட்டங்களுக்குள் சென்று சொற்ப வினாடிகளுக்குள் பூமியில் விழுகிறது, இவைகளை வைத்து பார்க்கும்பொழுது மனித தவறே முக்கிய காரணமாக இருக்கக்கூடும். மனித தவறுகள் நடப்பது இயல்புதான் அதையே சில துறைகளில் வெளிப்படையாக சுட்டிக்காட்டுவதும் கிடையாது, எதுவாக இருந்தாலும் அந்தந்த இடங்களுக்கு நன்கு பரிட்சியப்பட்ட ஓட்டுநர்களையே வைத்து உயர் அதிகாரிகள் பயண திட்டங்களை திட்டமிட வேண்டும் காரணம் ஏரோபிளேன் பறக்கும் உயரம் வேறு ஹெலிகாப்டர் பறக்கும் உயரம் வேறு...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்