dinamalar telegram
Advertisement

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்;பக்தர்கள் பரவசம்

Share
பம்பை: சபரிமலையின் பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் மேற்கொண்டனர்.


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவில் நிகழ்ச்சியிலே மகரஜோதியை காண்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அந்த வகையில், இன்று (ஜன.,14) மாலை, 6:45 மணிக்கு பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. மகர ஜோதி தரிசனத்தை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.

மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவாபரணங்கள் எனப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டு இன்று மாலை சபரிமலை வந்து சேர்ந்தது.திருவாபரண பெட்டிகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Sriraman - Chennai,இந்தியா

    Swamy Saranam iyyappa....

  • Sami Sam - chidambaram ,இந்தியா

    சபரி மலையில் மகர விளக்கு ஏற்றப்பட்டது

    • NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் - Vadodara, Gujarat,இந்தியா

      உண்மையே. மகர விளக்கு ஏற்றப்படும் ஒன்று. ஆனால் மகர ஜோதி என்பது தானாக தோன்றுவது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டு கருத்து சொல்வது நல்லது. ஜெய் ஹிந்த்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்