dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: விநாச காலே விபரீத புத்தி!

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல்கலை துணைவேந்தர்களை இதுவரை, 'வேந்தர்' என்ற முறையில், கவர்னரே நியமனம் செய்து வந்தார். இப்போது இந்தப் பொறுப்பை, தி.மு.க., அரசு எடுத்துக் கொள்ள விரும்புகிறது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்று, முடிவு செய்துள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி ரொம்ப கண்டிப்பானவர் என கருதப்படுவதால், இந்த திடீர் முடிவுக்கு தி.மு.க., அரசு வந்துவிட்டதோ என்ற, 'டவுட்' நமக்கு வருகிறது.

அறங்காவலர்களாக கட்சிக்காரர்களை நியமித்து, கோவிலின் புனிதத்தைக் கெடுத்தது போல, 'ஜால்ரா பேர்வழி'களை பல்கலை துணைவேந்தராக நியமனம் செய்ய, தி.மு.க., அரசு முடிவு செய்து விட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த சுரப்பா, மாநில அரசுக்கு ஜால்ரா அடிக்காமல், பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மட்டும் கட்டுப்பட்டு செயல்பட்டார்.

தேர்வு நடத்தாமலேயே, 'ஆல் பாஸ்' போடும் அ.தி.மு.க., அரசின் முடிவை ஏற்க முடியாது என்று, அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதனால் அவருக்கு தேவையில்லாமல் பல நெருக்கடிகளை, கடந்த அ.தி.மு.க., அரசு கொடுத்தது. பல துணைவேந்தர்கள், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்த கதை, நமக்கு தெரியும்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், கல்வித்துறை பல வழிகளில் சீரழிந்து போனது தான் மிச்சம். ஒரு காலத்தில் சென்னைப் பல்கலை, துணைவேந்தர் லட்சுமண சாமி முதலியார் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. மதுரைப் பல்கலை, மீனாட்சி சுந்தரனார் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பெருமை பெற்றது. அதன் பிறகு வந்த துணைவேந்தர்கள் பலர், பணம் சம்பாதிக்க முடிவு செய்து, பல்கலையை வியாபார நிறுவனங்களாக மாற்றிவிட்டனர்.

எனவே துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசே எடுத்துக் கொள்வது நல்லதாக தெரியவில்லை. கவர்னர் மாளிகை என்பது, தலையாட்டி பொம்மை வசிக்கும் இடமாக இருக்க வேண்டும் என, திராவிட கழகங்கள் நினைக்கின்றன. தி.மு.க., ஆட்சி காலத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகள் அரங்கேற காத்திருக்கின்றனவோ? 'விநாச காலே விபரீத புத்தி' என்பது சரியாகத் தான் இருக்கிறது!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (90)

 • DHANDAPANI.R - avaniyapuram,இந்தியா

  ஸ்டாலின் சார் ஏற்கனவே கலைஞர் கொண்டுவந்த சமசீர் கல்வியால், எட்டாம் வகுப்புவரை ஆல் பாஸ் இவை அனைத்தும் மாணவர்களின் கல்வி தரத்தை குறைத்து ஒரு போட்டித்தேர்வுக்கு தயார் ஆவதே கஷ்டமா போச்சு, இப்ப துணைவேந்தர், நாட்டு மக்கள் இன்னும் பின்னோக்கி செல்ல வழி வகை செய்யும்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இருக்கிற அதிகாரத்தை வைத்து ஊழல் இல்லா ஆட்சியை தர ஸ்டாலின் முயலட்டுமே - .வந்தவுடன் எல்லா அதிகாரிகளையும் இடம் மாற்றம் (என்ன உபயோகம் ? ) தினம் இரு 'ஆய்வு மணிகொருதரம் விளம்பரம் ,பிரச்சாரம் .இதெல்லாம் விட்டு விட்டு இன்னும் வேண்டும் அதிகாரம் என்பது பேராசையே தகுதி இல்லாமல் கற்றோரை முடக்குவது ,மற்றோரை உயர்த்துவது போன்ற்வற்றை கல்வித்துறையிலும் செய்வது நாட்டின் இழி நிலையையே அதிகமாக்கும் ,

 • M.Selvam - Chennai/India,இந்தியா

  தமிழ்நாட்டை கெடுத்து குட்டிசுவர் ஆக்கி விட்டார்கள் என்று கூப்பாடு போடும் நண்பர்கள் கவனத்துக்கு... பீஹார், மத்திய பிரதேசம், உபி ஏன் குஜராத் க்கூட கழகம் இல்லாத மாநிலங்கள் தானே..இவை போன்று இன்னும் நிறய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட பின்தங்கிய நிலை ஏனோ? ஊழல் செய்யாத மக்களை எதோ ஒரு வகையில் மடையர் ஆக்காத கட்சி இந்தியாவில் எங்கும் இல்லை என்பதே கசப்பான உண்மை..காரணம் மக்கள் விழிப்பு இல்லாத நிலை அல்லது தேவை என்றால் அவர்களும் லஞ்சம் ஊழலில் இறங்குவது...வெறுமே கட்சிகளை திட்டி என்ன பயன்? மக்கள் மாறாத வரை ..இப்பிடியே தான் போய் கொண்டிருக்கும்

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  ஆளுநர்களின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். நம் அரசியல்வாதிகள் முன் போல தியாகிகள் அல்ல. 99% தெருப் பொறுக்கிகள். பரீட்சியில் காப்பிஅடிப்பவன், வகுப்புக்கே வராமல் வட்டம் அடிப்பவன், ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது மூன்று முறை பெயில் ஆகி பள்ளிக்கூடம் தாண்ட முக்கியவன், ஆசிரியர்களை மதிக்காதவன், ஆசிரியைகளை காம இச்சையோடு பார்த்தவன், தெருவில் ரௌடியாக அலைந்து நேரத்தை வீணடித்தவன், போலீஸ் வசம் மாட்டி சிறை சென்றவன் என்று பலர் இன்று அரசியல்வாதிகளாக மாறி, அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். சுடலையே மிசாவில் தியாகம் செய்து சிறை சென்றவரல்ல. வட சென்னையில் அவரது காம லீலைகள் பிரசித்தம். ஆளுக்கு குறைந்தது இரண்டு பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள் என்று வைத்துக்கொள்பவர்கள். சினிமாத்துறையில் இவர்கள் ஆடின ஆட்டம் உலகமே அறியும். இப்படிப்பட்டவர்கள் கையில் அரசு நிர்வாகத்தைக் கொடுத்தால் வேறென்ன தான் செய்வார்கள்? சிலைகள் வைப்பார்கள். எல்லா இடங்களுக்கும் தங்கள் தலைவர்கள் பெயரை வைப்பார்கள். கமிஷன் அடிப்பார்கள். திருடுவார்கள். கொலைகள் செய்து, அதைத் தங்கள் கீழே வேலை செய்யும் போலீசை வைத்தே மூடி மறைப்பார்கள். கோயில்கள் இவர்கள் கையில் சிக்கினால் கொள்ளை அடிக்காமல் என்னதான் செய்வார்கள்? அவர்களது இயற்கை குணமே அதுதானே? ஒரு குண்டன் மேலே வந்தால், அவன் மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று ஊரைத்திருடி சொத்து சேர்ப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த விஷயம். அவர்கள் கைவைத்த எல்லாமே தரம் குன்றி, துருப்பிடித்து அழிந்துதான் போகும். இது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. இந்தியாவில் முக்கால்வாசி மாநிலங்களில் இதே நிலைதான். பேசாமல் தேசத்திற்கு மட்டும் ஜனாதிபதி ஆட்சி போல அமைத்து, மக்களால் ஜனாதிபதி நேராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அளவில் இந்த மாதிரித் தேர்தல்களுக்கு பதிலாக ஆளுநர் ஆட்சி வைத்து விடலாம். மாநிலங்களை இன்னும் சிறிதுகளாகப் பிரித்து விட்டால் ஊரில் இருக்கும் திருடர்களின் கொட்டம் பரவாமல் அடங்கும். ஆளுநர்கள் மத்தியிலிருந்து அமர்த்தப்பட்டால் அவர்கள் நிரந்தரமாக எந்த மாநிலத்திலும் செட்டில் ஆக மாட்டார்கள். ஊழல் குறையும். தரம் உயரும். இந்தியா உருப்பட இதுதான் வழி.

 • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

  இதற்கு தானே இந்த மக்கள் ஆசைப்பட்டார்கள் அனுபவிக்கட்டும் பட்டா கூட திருந்தாத மக்கள்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்