dinamalar telegram
Advertisement

23 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த தங்க நகைகள்

Share
Tamil News
மும்பை: மஹாராஷ்டிராவில் 23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டரூ. 8 கோடி மதிப்பிலான தங்க நகைகள்,அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பிரபல ஜவுளிக்கடை உள்ளது.இதன் நிறுவனரான அர்ஜன் தஸ்வானி வீட்டில் 1998ல் திருடர்கள் சிலர் நுழைந்தனர். தஸ்வானி மற்றும் அவரது மனைவியை கட்டி வைத்துவிட்டு, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை திருடிச் சென்றனர். அதே ஆண்டு இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன.


எனினும் அந்த நகைகள் உரிமையாளரிடம் அப்போது ஒப்படைக்கப்படவில்லை. இதற்கிடையே 2007ல் அர்ஜன் தஸ்வானி காலமானார்.இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அர்ஜன் தஸ்வானிக்கு பதில், அவரது மகன் ராஜு தஸ்வானி இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோரே, மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை ராஜுவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதற்கான ரசீதுகளை ஆதாரமாக காண்பித்து ராஜு அவற்றை பெற்றார்.23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அந்த நகைகளின் தற்போதையை மதிப்பு 8 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அந்த நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தச் செய்தி இந்திய நீதித்துறை மீது மிகவும் நன்மதிப்பை ஏற்படுத்திக்கிறது. நகைகளை 23 ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்த காவல்துறைக்குப் பாராட்டுக்கள்.

    • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

      பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கியில் வைக்கப் பட்ட ஜெயாவின் வைர நகைகள் என்ன ஆனதோ யார் அனுபவிக்கிறார்களோ யார் கண்டா

  • venkates - ngr,இந்தியா

    வழக்கு வந்தால் உடனடியாக தீர்க்கவேண்டும் ,,, இது போன்று காலம் தாழ்த்துவது நீதி இல்லை, அநீதியே

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    எப்போதாவது இப்படித்தான் இந்தியாவில் நல்ல நீதி வழங்கப்படுகிறது.

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    ஒரு நல்ல முதலீடு நல்ல வருவாய் ஆனா இதுக்கு மதிப்பேடு மற்றும் டாக்ஸ் எப்படி

Advertisement