Load Image
dinamalar telegram
Advertisement

பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார்?; மக்களிடம் கருத்து கேட்கும் கெஜ்ரிவால்

Tamil News
ADVERTISEMENT
சண்டிகர்: ஆம்ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பஞ்சாப் மக்கள் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தை பொறுத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

பஞ்சாபில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ், பா.ஜ., ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இது குறித்து இன்று (ஜன.,13) அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகவந்த் மான் எனக்கு மிகவும் நெருக்கமானவர், அன்பானவர். அவர் என் இளைய சகோதரர் போன்றவர்.
Latest Tamil News
பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு அவரை முதல்வராக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு, இதை பஞ்சாப் மக்கள் முடிவு செய்யட்டும் எனக் கூறினார். எனவே, ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வர் யார் என்பதை மக்களே இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். ஆம்ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் முகத்தை பஞ்சாப் மக்கள் தேர்வு செய்ய 7074870748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில் ஜன.,17ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • பேசும் தமிழன் -

    உங்கள் பெயரை தான் சொல்கிறார்கள்... ஆதலால் நீங்கள் டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு... பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டு... பஞ்சாப் மக்களை காப்பாற்ற வேண்டும்..... இது எப்படி இருக்கு???

  • DVRR - Kolkata,இந்தியா

    எல்லோரும் கெஜரிவால் பெயரையே சொல்வதால் கெஜரிவால் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இந்தியன் Constitution ஐ மாற்றவேண்டும் அதில் ஒருவர் இரு மாநிலத்திற்கு முதன் மந்திரியாக இருப்பதற்கு . அப்படி மோடி செய்யவில்லையென்றால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்ற எச்சரிக்கையுடன்

  • Balaji - Chennai,இந்தியா

    பக்கா அரசியல் வியாதி.. கிளீனர் விஞ்ஞானி பிட்சை எடுக்கவேண்டும் இவரிடம்... நீ ஜமாய் ராசா..

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்