16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை:கடலோர மாவட்டங்களில், 16ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும். கடலோரம் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், நாளை மிதமான மழை பெய்யும்.
வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!