மேலும் ஒரு மரகத லிங்கம் மீட்பு
சென்னை:''மேலும் ஒரு மரகத லிங்கம் மீட்கப்பட்டு, ரகசிய விசாரணை நடந்து வருகிறது,'' என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறினார்.
தஞ்சாவூர், அருளானந்தம் நகரில் வசிப்பவர் சாமியப்பன், 80. இவரது மகன் அருண பாஸ்கர், 50. இவர்கள், கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியை நடத்தி வருகின்றனர். சாமியப்பன் குடும்பத்தார், மன்னர் காலத்தில் இருந்தே செல்வாக்குடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களது வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை நிற மரகத லிங்கம் பதுக்கி இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, வங்கி லாக்கரில் இவர்கள் பதுக்கி வைத்திருந்த 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கத்தை மீட்டனர்.இந்த மரகத லிங்கம், திருக்குவளை தியாகராஜர் சுவாமி கோவிலுக்கு சொந்தமானது.
இக்கோவில், மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதனால், கோவில் மற்றும் ஆதீன நிர்வாகிகளையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துஉள்ளனர்.ஜெயந்த் முரளி கூறியதாவது:தஞ்சாவூரில் மீட்கப்பட்ட பச்சை நிற மரகத லிங்கம், சாமியப்பன் மற்றும் அருண பாஸ்கருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
தொடர் விசாரணையில், மேலும் ஒரு மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. வழக்கின் தன்மை, அடுத்த கட்ட விசாரணை கருதி, இந்த லிங்கத்தின் படம் மற்றும் அது பற்றிய விபரங்களை வெளியிடவில்லை; விரைவில் அறிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!