புதுடில்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து முன்ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கடந்த டிச.,18ல் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, காரில் சென்றுக்கொண்டிருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையில், ராஜேந்திரபாலாஜி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்று (ஜன.,12) நடைபெற்ற விசாரணையின்போது, ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் விருதுநகரை விட்டு வெளியே செல்லக் கூடாது போன்ற நிபந்தனையுடன் 4 வாரங்கள் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை விசாரிக்கையில், சுப்ரீம் கோர்ட், தமிழக அரசைப்பார்த்துக் கேட்ட கேள்விகளை ஏன் ஒரு ஊடகமும் வெளிக்கொண்டு வரவில்லை?
எல்லாம் ... பார்த்துப்பாரு
நிபந்தனை - அடித்ததில் பங்கு என்பதா?
சீக்கிரமே நெஞ்சுவலி ப்ராப்தி ரஸ்து.
கோர்ட் பணம் கொடுத்தற்க்கு ஆதாரம் இல்லாம ஒன்னும் செய்யாது, இவர் மொதல்லியே சரணடைஞ்சிருந்தா, போலீஸ் தேடுற வேலை மிச்சமாயிருக்கும். இவரு குடும்பத்துக்கும் தொந்தரவு ஆயிருக்காது, வேலைக்கு பணம் கொடுப்பதே தப்பு, அவனுங்களும் கூட்டுக்களவணிகள் தான். இவரை கைது பண்ணிட்டோம், ஜெயில்ல போட்டுட்டோம் என திமுக மார்தட்டுவது வேறு ஒன்றும் நடக்காது. இவரு வாங்குன காசுக்கு வேலை போடாமா, புது அமைச்சர் இன்னொருவாட்டி பணம் கேப்பாரு, கொடுத்தா வேலை தான். புது அமைச்சர், காசு வாங்காமதான் வேலை கொடுக்கிறேன் என பால் சொம்பு மேல சத்தியம் பண்ணுவாரா ? ராஜேந்திர பாலாஜியும், அணில் மாதிரி ரீபண்ட் கொடுத்துவிட்டு இந்த கேசை வாபஸ் வாங்கிடலாம்.
இந்த மனுவை விசாரிக்கையில், சுப்ரீம் கோர்ட், தமிழக அரசைப்பார்த்துக் கேட்ட கேள்விகளை ஏன் ஒரு ஊடகமும் வெளிக்கொண்டு வரவில்லை?