லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா
மும்பை: கோவிட் பாதிப்புடன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர் அடுத்து 10 -12 நாட்கள் ஐசியூ.,வில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று கோவிட் உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூ., வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உறவினர்கள் கூறுகையில், லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறி மட்டுமே தென்பட்டது. அவர் நலமுடன் உள்ளார். வயது முதிர்வை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.சி.யூ., வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமடைய பிரார்த்தனை செய்யுங்கள் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரதிட் சம்தானி கூறுகையில், லதா மங்கேஷ்கர் தொடர்ந்து ஐசியூ.,வார்டில் தான் இருப்பார். அடுத்த 10- 12 நாட்களுக்கு அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார். கோவிட்டுடன் அவர், நிமோனியா காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்து (2)
தேசிய இசைக்குயில் விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டி அமைவோம்.
சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கர் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.