ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் (ஜன.,10) தினசரி கோவிட் பாதிப்பு 1.68 லட்சமாக பதிவான நிலையில், நேற்று 1.94 லட்சமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 26,657 (15.8%) அதிகமாகும்.
இந்தியாவில் நேற்றைய (ஜன.,11) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.01 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 2.65 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஒமைக்ரான்
இந்தியாவில் மொத்த கோவிட் பாதிப்புகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,868 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1,281 பேரும், ராஜஸ்தானில் 645 பேரும், டில்லியில் 546 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (ஜன.,12) காலை 8 மணி நிலவரப்படி 153.80 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 85,26,240 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஒமொக்ரான் வந்து 10 நாளாகப் போகுது. அன்னிக்கே கை தட்டி, வெளக்கேத்தியிருந்தா இன்னிக்கி ஓடியே போயிருக்கும்.