Load Image
dinamalar telegram
Advertisement

கோவில் மண்டபம் மீட்பு: அறநிலைய துறை அதிரடி

காஞ்சிபுரம் : நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் மண்டபத்தை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டு வந்த கடைகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி, மண்டபத்தை மீட்டனர்.


காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, ஆலடி பிள்ளையார் கோவில் அருகில், பணாமுடீஸ்வரர் கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தை சிலர் ஆக்கிரமித்து, இரும்பு தகடுகளால் சுற்றுச்சுவர் அமைத்து, கடை அமைப்பதற்கான கட்டுமான பணி மேற்கொண்டு வந்தனர்.பாதுகாக்க வேண்டிய கோவில் நிர்வாகமே, தனியாருக்கு மண்டபத்தை தாரை வார்த்து கொடுக்கிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி, மண்டபத்தை உடனே மீட்க வேண்டும் என, பக்தர்கள் விடுத்த கோரிக்கை குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பணாமுடீஸ்வரர் கோவில் மண்டபத்தின் முன் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றி மண்டபத்தை மீட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement