பொங்கல் பொருட்களில் ஹிந்தி: பன்னீர்செல்வம் கண்டனம்
அவரது அறிக்கை: பொங்கலுக்கு ரொக்கத்துடன் கூடிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு துணிப்பையுடன் கூடிய 21 சமையல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழக மக்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.தரமற்ற பொருட்கள் எடை குறைவு பொருட்களின் எண்ணிக்கை குறைவு துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளை மக்கள் எடுத்துக் கூறினர்.
துணிப்பை பற்றாக்குறை என்பதை அரசே ஏற்றுக் கொண்டது.பெரும்பாலான பொருட்கள் வட மாநிலங்களில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளில் ஆங்கிலமும் ஹிந்தியும் இடம் பெற்றுள்ளன; தமிழ் இல்லை.சாலைகளில் உள்ள மைல்கல்லில் ஹிந்தியில் எழுதினால் ஹிந்தி திணிப்பு என தி.மு.க. கூறுகிறது.

ஆனால் மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதும் அந்த பொருட்களின் பெயர்கள் ஹிந்தியில் எழுதப்பட்டிருப்பதும் எந்த வகையில் நியாயம்? இந்த பொருட்களை உற்பத்தி செய்துதர தமிழகத்தில் நிறுவனங்களே இல்லையா.பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
பொங்கல் தொகுப்பு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (37)
பொங்கல் திருநாளை கொண்டாட சர்க்கரைப்பொங்கலுக்கு அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்பு, நெய், பானை இருந்தால் போதாதா? மிளகாய் தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், கடலை பருப்பு, உப்பு, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, கோதுமைமாவு கடுகு, ஜீரகம் மற்றும் இன்னபிற ஐட்டங்கள் தேவை இல்லையே? ஒரு குடும்ப அட்டைக்கு ஆகும் செலவு Rs. 1050/- வருகிறது. இதனை வங்கி கணக்கில் செலுத்தியிருந்தால், மனித நேரம் வீணாகி இருக்காது, பொருட்கள் பற்றி குறைகள் இருக்காது, தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்.
"பொங்கல் தொகுப்பு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்"... இப்படி சொல்றதாலதான் மக்களுக்கு உங்களை பிடிக்கவில்லை.... விடியல் சொன்னார் பாரு... நாங்கள் ஆச்சிக்கு வந்ததால் முறைகேடு செய்தவர்களை பிடித்து தக்க தண்டனை வழங்குவோமுன்னு... அதுபோல சொல்லனும்....
தமிழருக்கு வேலை இல்லை வடமாநிலத்தவருக்குத்தான் வேலை என்று சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தவர் எப்படி பேச தகுதியானவர் ,,,தமிழர்களை வேளைக்கு எடுக்காமல் தமிழ் தெரியாதவர்களை வடமாநிலத்தவர்களை மின்சார வாரியத்துக்கு தேர்ந்தெடுத்து வேலை கொடுத்தவர் பேசுகிறார் இரண்டுவருடத்துள் தமிழ் கற்றுக்கொள்வார்கள் என்று சொன்னவர் pesuhirar
ரூவா நோட்டுல இந்தி இருக்கே. ஒங்க இந்தி வேணாம் போடா குருப்பு அதுக்காக ரூபா நோட்டு வேணாம் போடான்னு சொல்லுவீங்களா. நீங்களும் ஒங்க மொழி வெறுப்பும்.
தமிழ் வாழ்க என்று எழுதி இருந்த போர்ட கழட்டி குப்பையில் போட்டவர இப்படி பேசுறாரு