சென்னை: தமிழகத்தில் உள்ள முன் களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.,10) துவங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பூஸ்டர் டோஸ் செலுத்தியது தொடர்பாக அவர் கூறுகையில், ‛முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்,' எனக் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவ மனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், மாநகர மருத்துவ மையத்தில் செலுத்திக்கொண்டு இருந்தால், மக்களின் முன்கள பணியாளராக / பிரதிநிதியாக, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முன்மாதிரியாக அமைந்து இருக்கும்.