சென்னை: கொரோனா பரவலை அடுத்து, தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வுகள் மட்டுமே ஒத்திவைக்கப்படுகிறது; செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். கொரோனா பரவல் குறைந்த பிறகே தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும். விடுமுறை காலத்தை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும். அரசு உத்தரவை மீறி கல்லூரி நடத்தினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி , நீட் விலக்கு எல்லாவகையான தேர்வு விலக்கு கொடுத்து ஓசியில் மாணவர்களுக்கு சீட்டுவாங்கி கொடுப்பார் இவர் .... அவர்கள் மருத்துவராகி கொரோனாவுக்கு பல்சிகிச்சை அளிப்பார்கள் .... வாழ்க பெரியார் வழி வெங்காய சமூக நீதி
மெதுவா படிச்சிட்டு வரதுக்குள்ள
கிழவன் ஆயிடுவான் அப்பு
சமசீர் வந்து பள்ளிப்படிப்பு கோவிந்தா
உயர்கல்விக்கும் அதுதான்
ஆகும் தமிழ்நாடு கல்விக்கொள்கை
மாணவர்களை முட்டாளாக்கி
நம்பிக்கை இழக்க செய்து
விட்டது
நவம்பரிலேயே நடந்து முடிந்திருக்க வேண்டிய பல்கலை கழக தேர்வுகளை, இவர்கள் குழப்பி குழப்பியே இது நாள் வரை இழுத்தார்கள். இனி எப்போது நடத்துவார்கள். அடுத்த செமஸ்டர் எப்போது துவங்கும் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் ... கல்வியை போது பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவது மிக நல்லது.. ஆன் லைன் வழியில் தேர்வுகளை நடத்துவது நல்லது ...கோவிட இந்த பெயரை சொல்லி கல்வியை முடிந்த அளவுக்கு நாசம் செய்கிறார்கள்..இந்த திருட்டு திமுக ஆட்கள் ...
ஆமாம்.. படிச்சிட்டு வந்தா ரெண்டு கோடி வேலை கொட்டிக் கிடக்கிற மாதிரி... எல்லாம், மெதுவா படிச்சுட்டு வரட்டும்.
கல்லூரி பற்றிய முடிவா இருக்கே... சேகர்பாபு கிட்ட அனுமதி வாங்கிட்டிங்களா பொன்முடி சார்?....
மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி , நீட் விலக்கு எல்லாவகையான தேர்வு விலக்கு கொடுத்து ஓசியில் மாணவர்களுக்கு சீட்டுவாங்கி கொடுப்பார் இவர் .... அவர்கள் மருத்துவராகி கொரோனாவுக்கு பல்சிகிச்சை அளிப்பார்கள் .... வாழ்க பெரியார் வழி வெங்காய சமூக நீதி