கோவிட் பூஸ்டர் தடுப்பூசி :முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சென்னை: தமிழகத்தில் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஜனவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கோவிட் 2 டோஸ் போடப்பட்டாலும் 3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுரையின் படி நாடு முழுவதும் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் ஊசி முன்களப்பணியாளர், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதன்படி இன்று (ஜன.,10) சென்னை பட்டினம்பாக்கம் எம்ஆர்சி நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.
60 வயதுக்கு மேற்பட்ட 20.3 லட்சம் பேருக்கும் , முன்களப் பணியாளர்கள் 9.78 லட்சம் பேருக்கும் , சுகாதார பணியாளர்கள் 5.65 லட்சம் பேருக்கும், மற்றும் முதல் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகிறது. 35. 46 லட்சம் பேர் தற்போதைய முன்னுரிமைப்படி பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானர்வகள். இம்மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு இந்த 3வது பூஸ்டர் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (10)
ஸ்டாலினுக்கு அல்லவா முதல் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும்.
மத்திய அரசு தரும் இலவச தடுப்பூசி க்கு இவங்க ஒவ்வொரு அலைக்கும் ஒரு விழா😛 பலர் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளவே வரவில்லை. இந்த அழகில் இன்னொரு விழா? அடுத்த அலைக்காவது தடுப்பூசி போட்டுக் கொள்ள ... அனுப்பி 🤔விளம்பரம் செய்து கூப்பிடுங்க
சுகாதாரத்துறை அமைச்சர் பூஸ்டர் ஊசி போட்டு காண்பித்து மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகலாம்....பயம் அவர்களுக்கு....வேரு ஒரு வைரஸ் வந்தால் இன்னொரு ஊசி போட சொல்வீர்களா...மக்கள் அனைவரையும் ஒரு பொட்டலில் வைத்து குத்தி குத்தி கொன்று விடுங்கள் அய்யா...
ஆரம்பத்தில் தடுப்பூசிகளை மத்திய அரசு கொண்டுவந்தபோது மோடி போட்டுக் கொண்டாரா எனக் கேட்ட ஸ்டாலின் இப்போது பூஸ்டர் தடுப்பூசிக்கு முதல் நபராக நின்றாரா என ஏதோ கேட்கத் தோன்றுகிறது.
அவரு போட்டுக்கல?