Load Image
dinamalar telegram
Advertisement

கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

Tamil News
ADVERTISEMENT
பெங்களூரு: பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக, 3 கோடி ரூபாய் வாங்கி, மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
Latest Tamil Newsஇவரை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வந்தனர். அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நாளை(ஜன.,6) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள பி.எம்., சாலையில் காரில் சென்றுக்கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

4 பேர் கைது
இந்த நிகழ்வில், ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் ராமகிருஷ்ணன், இவரின் உதவியாளர் நாகேஷ் (ராஜேந்திர பாலாஜி சென்ற காரை ஓட்டியவர்), ராஜேந்திர பாலாஜியின் காருக்கு முன்பு பாதுகாப்புக்காக காரை ஓட்டிச்சென்ற ஓசூர் நகர செயலாளர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட ஐ.டி., பிரிவு தலைவர் பாண்டியராஜன் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்தபோது ராஜேந்திர பாலாஜிக்கு இரண்டு முன்னாள் அதிமுகஅமைச்சர்கள் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (105)

 • Sangikikaluku Sangu Oothupavan - THENI,இந்தியா

  அப்படியே, இதுல தான் எத்தனை தங்கள் கருத்தை சொல்லுறாங்க பொங்கல் என்பது தமிழர் பண்டிகை, ஆடு மாடு வைத்து விவசாயம் செய்யும் அனைவருக்கும் சொந்தமா பண்டிகை தான் இந்த பொங்கல், இதுகூட புரியாம, ராஜா,ஆரூர் ரங், தேசி, தங்கராஜ் கோ தண்டம், தமிழவேள், இப்படி பல பேர்கள், முருக நீ தான் இவங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கணும்

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  முதல் தகவல் அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்பட்டது, த முதல்வரே? உங்கள் தந்தையாரைக் காவல்துறை கைது செய்தபோது சிலர் தடுத்தார்களா?

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  இனிமேல் பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருக்க வேண்டியதுதான்.

 • அறவோன் - Chennai,இந்தியா

  @ Bhaskaran - உத்தமராம், உலகறிந்த பொருளாதார மேதையாம், பண்பாளராம், திரு.சிதம்பரம் ஐயா அவர்களின் வீட்டு சுவரேரிக்குதிக்கவைத்த தீய ஜல்சா கட்சி வாயை திறக்க அருகதையில்லை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பெரும்படை பட்டாளத்தை வைத்து மோசடிக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை பிடிக்க காவல்த்துறைக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கிறது. இனி வழக்கு நடத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பதற்குள் பலருக்கு வயதாகிவிடும். லஞ்சம் கொடுத்தவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்...

Advertisement