Load Image
dinamalar telegram
Advertisement

கோவில் நிலத்தில் உப்பளம்: ஐகோர்ட் அதிரடி

மதுரை:விளாத்திகுளம், குளத்துார் கோவில் நிலத்தை உப்பளமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில், தற்போதைய நிலை தொடர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே குளத்துாரைச் சேர்ந்த லிங்கராஜ் தாக்கல் செய்த மனு:குளத்துாரில் குழந்தை விநாயகர் கோவில் உள்ளது. இதற்குச் சொந்தமாக 49.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதை உப்பு உற்பத்திக்காக, உப்பளமாக அரசுத் தரப்பில் வகை மாற்றம் செய்யப்பட்டது.

மத வழிபாட்டுத் தலத்திற்குரிய நிலத்தை வணிக நோக்கிலான பயன்பாட்டிற்கு மாற்ற முடியாது.உப்பளமாக மாற்றுவதற்கு எதிராக, கிராம ஊராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உப்பளத்திற்கு ஒதுக்கீடு செய்ய ஏல அறிவிப்பை அறநிலையத் துறை வெளியிட்டது. இதற்கு எதிராக தாக்கலான வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய, கலெக்டர் மற்றும் நகர் ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறுவது அவசியம். அனுமதி பெறவில்லை. விதிகளை பின்பற்றவில்லை. தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். உப்பளத்திற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது.'டெண்டர் விடப்பட்டுள்ளது. இறுதி முடிவெடுக்க அறநிலையத் துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது' என, அரசு தரப்பு தெரிவித்தது.நீதிபதிகள், 'இவ்விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும். அறநிலையத் துறை கமிஷனர், துாத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement