Load Image
Advertisement

பிள்ளைகள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் விரக்தி

Tamil News
ADVERTISEMENT
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை சேர்ந்தவர், பிள்ளைகள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால், தான் சம்பாதித்த 2 கோடி ரூபாய் வீட்டை, முருகன் கோவிலுக்கு தானமாக கொடுத்தார்.

காஞ்சிபுரம், முனுசாமி அவென்யூ பகுதியில் வசிப்பவர் வேலாயுதம், 85. அவரது மனைவி ஞானமணி.காஞ்சிபுரம் நகராட்சியில், துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், வேலாயுதம். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன். மூன்று பேரும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்ளை திருமணம் செய்து கொண்டனர். இதனால், தன் குல தெய்வமான குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு தன் சொந்த வீட்டை தானமாக எழுதி கொடுத்துள்ளார்.

இது குறித்து வேலாயுதம் கூறியதாவது:நான் சம்பாதித்து வீட்டை கட்டினேன். ஹிந்து மதத்தை சேர்ந்த எனக்கு, கடைசி காலத்தில் பிள்ளைகள் இறுதி சடங்கு செய்வர் என இருந்தேன். இரு மகள்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும், அரசு பணியில் உள்ளனர். ஒரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும் கிறிஸ்துவ மதத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.


மூன்று பிள்ளைகளும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டனர். எனவே, எனக்கு ஹிந்து முறைப்படி அவர்கள் இறுதி சடங்குகள் செய்யப்போவது இல்லை. எனக்கு சொந்தமான 2,680 ச. அடி பரப்பளவு வீடு, தற்போது 2 கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த வீட்டை மதம் மாறியஎன் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பவில்லை.ஆகையால், என் குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன்கோவிலுக்கு தானமாக எழுதி வைத்து விட்டேன்.

கிறிஸ்துவர்களாக மாறிய பின் நான் இறந்தாலும், எனக்கு அவர்கள் இறுதி சடங்கு செய்ய மாட்டார்கள். இதனால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு என் சொத்தை கொடுக்க விருப்பம் இல்லை.தற்போது என் மூத்த மகளும், இரண்டாவது மகனும் என் வீட்டில் ஒரு பகுதியில் வசிக்கின்றனர்.

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை, இந்த வீட்டில் அவர்கள் வசிக்கலாம். எங்கள் மறைவுக்கு பின் இந்த வீட்டை கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ளும். அதற்கான வீட்டு பத்திரத்தை அறநிலையத்துறை அமைச்சர் முன்னிலையில், நேற்று முன்தினம் கோவிலுக்கு வழங்கி விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (64)

  • sankar - bangalore,இந்தியா

    வணங்குகிறேன். முன்னுதாரணம். தாய் தர்மத்தையும் தாய் மொழியையும் விட்டவர்களுக்கு நல்ல கதி கிடையாது .ஆயிரம் ஆயிரம் வருடங்களாக தமிழ் மன்னர்களும் தமிழ் அறிஞர்களும் காப்பாற்றிய கலாச்சாரம் இது .

  • KayD - Mississauga,கனடா

    முருகன் கோயில்க்கு 2 கோடி மதிப்பு வீடை கொடுத்தது அருமை. பிறகு புரியும் எத்தனை முருக பக்தாஸ் அந்த அறுபடை வீட்டை கூறு போட்டு சுட்டு சண்டை போட்டு அடிச்சிக்கும் பொது.. அப்ப நினைப்பர் என் மதம் மாறிய பிள்ளைகள் better என்று..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி. பழுத்த தஞ்சை பிராமணர், அமெரிக்காவில் டாக்டராக குடிபுகுந்தவர். கோடியில் பணம், பேர் சொல்ல ஒரு பிள்ளை. கல்யாண பிராயம் வந்தது. ஒரு நாள் மகன் தந்தையிடம், "டாடி, உங்க கிட்டே தனியா பேசணும், பேமெண்ட்டுக்கு வாங் என்று கூட்டி சென்றான். சொல்றதை கேட்டு டென்ஷன் ஆகாதீங்க டாடி என்று ஒரு லார்ஜ் ஸ்காட்ச் ஊற்றி நீட்டினான். தந்தை குடிக்காமல், மகன் என்ன சொல்லப் போகிறானோய் என்ற பதட்டத்தில் கை நடுக்கத்தை மறைத்து நின்றிருந்தார். அப்புறம் நிதானமாக மகன் தந்தையிடம், "டாடி கே மேரேஜ் பத்தி என்ன நினைக்கிறீர்கள்" என்று ஆரம்பித்தான். அவ்வளவு தான், மாமா மடக்குன்னு ஸ்காட்சை முழுங்கி விட்டு இன்னொரு லார்ஜையும் குடித்தார். அப்புறம், "லிசன் டியர் சன், மம்மி கிட்டே உக்காந்து பேசலாம்" என நடுங்கினார். டோன்ட் ஒரி டாடி, எனக்கும் அதில் உடன்பாடில்லை தான். ஆனால் நான் ஒரு கருப்பியை காதலிக்கிறேன், அதை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன" என்று கேட்டான். "எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை மகனே", என்று மகனை ஆரத்தழுவிக் கொண்டார். கதை புரிந்திருக்கும் என்று நினைக்கிறன். மனிதர்களை பாருங்கள். மனங்களை பாருங்கள். மதம்பிடித்து அலையாதீர்கள்..

  • ஆக .. - Chennai ,இந்தியா

    சர்ச்சில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால் இறுதி சடங்கை அவர்களே செய்கிறார்கள் ...இந்து மத அமைப்புகள் இறுதி சடங்கை அவரவர் முறைப்படி செய்யவும் பதிமூணு நாள் காரியங்கள் செய்யவும் ஆண்டு தோறும் திதிகளில் திவசம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்து ஆன் லயனில் பணம் பெற்றுக்கொள்ளலாம்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    அவங்களும் மனுஷப்பிறவிங்க தானே? உங்க ஆன்மீகமும், மதமும் என்ன கருமத்தை தான் சொல்லிக்கொடுத்ததோ புரியல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement