ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 18 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் 7 பேரும்( 6 பேர் கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்) திருவண்ணாமலை, கன்னியாகுமரி மற்றும் திருவாரூர் மருத்துவமனைகளில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொருவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார். இதன் மூலம் தமிழகத்தில், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 18 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!