ADVERTISEMENT
புதுடில்லி: டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படுவது உள்ளிட்ட பல புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளன. டில்லியில் 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (டிச.,28) அமலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டில்லியில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்:
* டில்லியில் இரவு ஊரடங்கு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
* தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். இதில், அத்தியாவசிய சேவை அளிக்கும் மருத்துவமனைகள், ஊடகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை உள்ளடக்கிய நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* திருமண நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். அதேபோல், இறுதிச்சடங்குகளிலும் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
*வணிக வளாகங்கள், கடைகள் ஒற்றைப்படை - இரட்டைப்படை தேதிகள் அடிப்படையில் இயங்க அனுமதிக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி உண்டு.
*ஆன்லைன் டெலிவரிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
* குடியிருப்பு பகுதிகளில் உள்ள தனியாக இருக்கும் கடைகள் ஒற்றைப்படை, இரட்டைப்படை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியதில்லை.
* தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவைகள் மீண்டும் மூடப்படும்.
* பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படும்.
* டில்லி மெட்ரோ 50 சதவீத இருக்கை வசதியுடன் இயங்கும். பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* சமூக, அரசியல், மத, திருவிழா மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடையாது.
* ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் 50% இருக்கை வசதியுடன் இயக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!