Load Image
dinamalar telegram
Advertisement

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக அதிகரிப்பு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தி வரும் ஜன.,1-ம் தேதி முதல் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
Latest Tamil Newsமேலும், பொங்கல் பரிசாக ‛சி' மற்றும் ‛டி' பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.500 வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு தோராயமாக ரூ.169.56 கோடி அளவிற்கு செலவினம் ஏற்படும். தமிழக அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்த சூழ்நிலையிலும் இந்த உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (34)

  • Kalyanasundaram Linga Moorthi - Accra,கானா

    whoever elected dmk, suffer this and more for the balance of their term

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பணம் இருக்கிறதோ இல்லையோ அதை டக்ளஸ் பார்த்துக்கொள்வார்... ஊராட்சி அரசுக்கு நோட்டடிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

  • ராமகிருஷ்ணன் -

    பாவம் அரசு ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் லஞ்ச பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர்.மற்றும் தேர்தல்களில் திமுக வெற்றி பெற பற்பல தில்லாலங்கடி வேலை செய்கின்றனர். அதற்கு கூலியாக இந்த ஊதிய உயர்வு, மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இனி தமிழ்நாட்டில் வாழத் தகுதியானவர்கள் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் மட்டுமே. மற்றவர்கள் செத்தொழிய வேண்டியதுதான்.

  • Muthiah.G - Tamil Nadu,இந்தியா

    1.கிராம நிர்வாக அலுவலர்கள்- கிராமத்தில் உள்ள அரசு நீர்நிலைகள், பாதைகள் ,கிராம மக்களுககு தேவைகளை கேட்டறிவது. கிராம கணக்குகளை பதிவு செய்வது. 2.வருவாய் ஆய்வளர்கள்-கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளை சரியாக செய்து வருகின்றார்களா என்பதை ஆய்வு செய்வது. 3. வட்டாச்சியர்- கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வளர்கள் அவரவர் பணிகளை ஒழுங்காகவும்,சரியாகவும் செய்து வருகின்றனரா என்பதை ஆய்வு செய்வது. ஆனால் மக்களுக்காக பணிகள் செய்தில்லை, கரை வேட்டிகளின் பின்னால் சென்று வருவது அவர்களின் பணியாகிவிட்டது. வருவாய்துறையில் உள்ளவர்களின் ஒரே பதில் நீதிமன்றம் செல்லுங்கள் எனக்கூறுவது. இதை சொல்வதற்கு மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம், ஊக்கத்தொகை, அகவிலைப்படி ..? எது சுதந்திரம்? எங்கு சுதந்திரம்? யாருக்கு சுதந்திரம்? ஆனால் மக்களுக்காக சுதந்திரம் எங்கே?

Advertisement