dinamalar telegram
Advertisement

ஆளும்கட்சியின் மிரட்டல்: அரசியல் தொடக்கம் : அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் முடக்கம்!

Share
Tamil News
ஆர்.எஸ்.புரம் மாதிரிச்சாலையில், 'வாக்கிங்' போய்க் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். துாரத்தில் வந்த '1 சி' பஸ்சைப் பார்த்த மித்ரா, ''அக்கா! போனவாரம் வடவள்ளியில, மு.க.தமிழரசு மாமியார் இறந்ததுக்கு முதல்வர் வந்திருந்தாரே. அன்னிக்கு அழகிரியும் வந்திருந்தாரே... ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லையா?'' என்று அரசியல் கேள்வியுடன் அரட்டையை ஆரம்பித்தாள்.''கட்சிக்காரங்க, மீடியாக்காரங்க எல்லாருமே, அதைத்தான் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருந்தாங்க...ஆனா, சி.எம்.,வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடியே, அங்க இருக்குற ஒரு ரூமுக்குள்ள போய் அழகிரி உட்கார்ந்துட்டாராம். அவர் போன பிறகு 10 நிமிஷம் கழிச்சுதான், அவரும் வெளியே போயிருக்காரு!'' என்று மித்ரா சொல்லும்போதே குறுக்கிட்டாள் சித்ரா...''உள்ளூர் கட்சிக்காரங்களும் அழகிரிட்ட பேசவே இல்லியா?''''நிறையப்பேரை அவருக்குத் தெரியாது...ஆனா தெரிஞ்சவுங்களுமே, அவரைத் தேடிப் போய்ப் பார்க்குறதை 'அவாய்டு' பண்ணிட்டாங்க. அழகிரி கிளம்புறப்போ, அங்க வந்த பொங்கலுார் பழனிசாமி, கார் கிளம்புற நேரத்துல, கார் கண்ணாடியைத் தட்டிருக்காரு. உடனே அழகிரி, கார் கண்ணாடியை இறக்கிட்டு, 10 நிமிஷம் கார்ல உட்கார்ந்தபடியே பேசிட்டுப் போயிருக்காரு!''''அதை விடு...சண்டே அன்னிக்கு உதயநிதி கலந்துக்கிட்ட பூத் ஏஜென்ட்கள் மீட்டிங்ல அவர் பேசுனதுக்கு ஒரே 'அப்ளாஸ்'ன்னு கேள்விப்பட்டேன்...அப்பிடி என்ன பேசுனாராம்?''''கோயம்புத்துார் மக்களுக்கு குசும்பு அதிகம்...போன எலக்சன்ல காசைக் கொடுத்து, 10 தொகுதியிலயும் ஜெயிச்சிட்டாங்க. நம்மகிட்டயும் ஒத்துமை இல்லை...இந்தத் தேர்தல்ல அப்பிடி விட்டுறக்கூடாது. எலக்சன் டைம்ல நான் 10 நாளு இங்கேயே வந்து தங்கப்போறேன்னு சொல்லிருக்காரு. அதுக்குதான் கைதட்டிருக்காங்க. அவர் வந்தா 'கவனிப்பு' நல்லாருக்கும்னு உடன் பிறப்புகள் உற்சாகத்துல இருக்காங்க!''''ஏன் செந்தில்பாலாஜி எதுவும் கவனிக்கிறது இல்லையா...?''''தெரியலை. ஆனா, போன தேர்தல்ல கட்சிக்காரங்க நிறையப்பேரு, அப்போ இருந்த ஆளும்கட்சிக்காரங்களோட 'டை அப்' ஆனதா அவருக்கு தகவல் கிடைச்சிருக்கு. உள்ளாட்சித் தேர்தல்ல அப்பிடி ஆயிரக் கூடாதுன்னு வார்டுக்கு ஒருத்தர் வீதம், கரூர்க்காரங்களைப் போட்டு, கட்சிக்காரங்களை கவனிச்சிட்டு இருக்காராம்!''''என்னதான் கவனிச்சாலும், கோவை தி.மு.க.,காரங்களை மாதிரி, 'சொந்தக்கட்சிக்கு சூனியம்' வைக்கிற வேலையை வேற யாரும் பார்க்க மாட்டாங்க. யார் யாருக்கு மேயர் பதவி வாய்ப்பிருக்கோ, அவுங்க எல்லாம் அதே வாய்ப்பிருக்குற மத்தவுங்களைப் பத்தி, தலைமைக்கு தாறுமாறா பெட்டிஷன் தட்றாங்களாம்.இப்போ அதில்லை பிரச்னை...மேயர் எலக்சன்ல ஆளும்கட்சி ஜெயிக்கணுக்கிறதுக்காக, ஒவ்வொரு வாரம் சனி, ஞாயிறும் செந்தில் பாலாஜி இங்க வந்துர்றாரு...இல்லேன்னா உதயநிதி, வேற யாராவது மினிஸ்டர் மாதிரி யாராவது வந்துர்றாங்க...முக்கிய அதிகாரிங்க யாரும் லீவே எடுக்கமுடியலை!''''அதனால...?''''வார நாள்ல ரெண்டு நாளு லீவு எடுத்துக்கிட்டு சொந்த வேலையைப் பாக்குறாங்களாம்...அந்த ரெண்டுநாள்ல பொதுமக்கள் யாரும் முக்கியமான ஆபீசர்களைப் பார்க்கமுடியலையாம்!''மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ''செந்தில் பாலாஜி யினாலதான், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களையும் ஊருக்குள்ள பார்க்க முடியலை தெரியுமா?'' என்று கேள்வி கேட்டு நிறுத்தினாள் சித்ரா...''ஏன்...போன வாரம் கூட, பொள்ளாச்சி ஜெயராமன் மேல கேசு போட்டதுக்கு எதிரா, ஐ.ஜி.,கிட்ட ஒண்ணாச் சேர்ந்து பெட்டிஷன் கொடுத்தாங்களே?'' என்று மித்ரா கேட்டதும் மீண்டும் தொடர்ந்தாள்...''அதுலதான் இருக்கு மேட்டரே...ஜெ., நினைவு நாளன்னைக்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறுனதா, மாநகர் மாவட்ட செயலாளராக இருக்குற வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன் மேல கேசு போட்டாங்க. அதைக் கண்டிச்சுதான் ஆர்ப்பாட்டம் பண்ணுனாங்க. அதுக்கு நடந்த ஆயத்த மீட்டிங்ல கூட வேலுமணி ரொம்பவும் ஜாக்கிரதையாத்தான் பேசுனாரு!''''ஆனா ஆர்ப்பாட்டத்துல போலீசை பயங்கரமா வெளுத்து வாங்குனாரே?''''அவர் தப்பிச்சிட்டாரு. ஆனா கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.,அருண்குமார், உற்சாகத்துல ஏதோ எக்குத்தப்பாப் பேசி மாட்டிட்டாரு. அவர் மேலயும் கேஸ் போட்டாங்க. அடுத்து பொள்ளாச்சி ஜெயராமன், ரொம்ப 'ஸ்ட்ராங்கா' பேசிட்டு இருந்தாரு. அவர் மேல செருப்பைத் துாக்கி எறிஞ்சு அசிங்கப்படுத்திட்டு கேசும் போட்டுட்டாங்க. அதனால எல்லாரும் பயத்துல கொஞ்சம் ஒதுங்குறதா பேச்சிருக்கு!''''ஓ... அதனாலதான் எம்.ஜி.ஆர்., நினைவு நாளன்னிக்குக் கூட அஞ்சலி செலுத்த யாரும் வரலையா?''''அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்...ஆனா, அதே நாள்ல, ஒன்றுபட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தை, அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தி, உடன்பிறப்புகளை உசுப்பேத்தி விட்டிருக்காரு. அந்தத் தகவல் தெரிஞ்சுதான் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அமைதியாயிட்டாங்கன்னு தகவல்!'' என்றாள் சித்ரா.சிறிது நேரம் அமைதியாக இருவரும் நடந்து கொண்டிருந்தனர். உற்சாகத்தோடு மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா...''அக்கா! போன வாரம் கணபதியில ஒரு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு அங்க இருந்த ஆபீசர், ரெண்டு லட்ச ரூபா வாங்குனதா பேசிட்டு இருந்தோமே...அன்னிக்கு மறுநாளே அவரை சூலுாருக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களாம்!''''அது எனக்கும் தெரியும்...இதுக்குப் பேருதான் பனிஷ்மென்ட்டா...சூலுார் என்ன வருமானமே இல்லாத ஆபீசா...அங்கயும்தான் ஜோரா சம்பாதிப்பாரு...சூலுாருக்கு 20 லட்சம், 30 லட்சம்னு வாங்கிட்டுதான் டிரான்ஸ்பர் கொடுப்பாங்க. இவர் ரெண்டு லட்சத்தையும் வாங்கிட்டு, பத்து பைசா காசே கொடுக்காம அங்கயும் போய் உட்கார்ந்துட்டாரு!''''அதான்க்கா புரியலை...அவர் சாதாரணமா ஒரு பதிவுக்கு ஒரு லட்ச ரூபா வரைக்கும் வாங்கிருக்காரு. நாம பேசுன மேட்டர்ல, ஒரு ஆபீசர்ட்ட இருந்து ரெக்கமண்டேஷன் போன பிறகுதான் ரெண்டு லட்ச ரூபா வாங்கிருக்காரு. லஞ்சத்துல உண்மையிலயே இது 'வேற லெவல்'தான்!''கொந்தளித்த மித்ராவின் தோளை அழுத்தி ஆசுவாசப்படுத்திவிட்டு சித்ரா தொடர்ந்தாள்...''எல்லா டிபார்ட்மென்ட்லயும் காசு விளையாட ஆரம்பிச்சிருச்சு மித்து...அதுலயும் சிட்டி, ரூரல் ரெண்டு போலீஸ்லயும் கட்டப்பஞ்சாயத்து செம்மயா நடக்குது...அஞ்சரை கோடி ரூபா மோசடி புகார்ல, மாவட்ட க்ரைம் பிராஞ்ச்ல ஒரு கேரளா தம்பதியைத் தேடிட்டு இருக்காங்க. ஆனா அவுங்க போட்டோவை மீடியாகாரங்க கேட்டா, 'படத்தைப் போட்டா தப்பிச்சிருவாங்க'ன்னு சொல்றாராம் அங்க இருக்குற ஆபீசர்!''''உண்மைதான்க்கா...ஒரு நம்பர் லாட்டரியை ஒழிக்கணும்னு டி.ஜி.பி.,ஆர்டர் போட்டதும், நம்ம சிட்டி போலீசும் சில ஆளுங்களை அரெஸ்ட் பண்ணிருக்காங்க. தடாகம் ரோட்டுல கிருஷ்ணன்னு ஒருத்தரை காலையில கைது பண்ணி, சாயங்காலம் விட்ருக்காங்க...விசாரிச்சா, எட்டு விரல்ல மோதிரம் போட்டுட்டு வர்ற ஒருத்தரும், ஒரு நம்பர் லாட்டரியை மொத்த வியாபாரியும் சேர்ந்து ஸ்டேஷன்ல பெரிய அமவுன்டைக் கொடுத்து ரிலீஸ் பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சது!''''மித்து...போலீஸ் வசூல் பண்றது ஒரு பக்கம்...போலீஸ் பேரை வச்சும் வசூல் நடக்குது...க.க சாவடியில இருக்குற ஆர்.டி.ஓ., டிபார்ட்மென்ட் அவுட் செக்போஸ்ட்ல இருக்குற ஒரு லேடி ஆபீசர், 'என்ர வீட்டுக்காரு போலீசு...என்னை யாரும் எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லியே மெரட்டி மெரட்டி வசூல் பண்றாராம்...விஜிலென்ஸ் என்ன பண்றாங்கன்னே தெரியலை!''சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஸ்போர்ட்ஸ் டிரஸ்சில் எதிரில் சில மாணவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் மித்ரா வேறு மேட்டருக்கு தாவினாள்...''அக்கா...பாரதியார் யுனிவர்சிட்டியில நடக்குற விளையாட்டுப் போட்டி பத்தி ஒரு கம்பிளைன்ட். சில பிரைவேட் காலேஜ்காரங்க, அவுங்க டீம் ஜெயிக்கணும்னு, காலேஜ்லயே படிக்காத பசங்களுக்கு போலி அடையாள அட்டை தயார் பண்ணி விளையாட விடுறாங்களாம்... அதனால, ஸ்டூடண்ட்ஸ் பலரும் பாதிக்கப்படுறாங்கன்னு காலேஜ் பிசிக்கல் டைரக்டர்களே புலம்புறாங்க!''''இந்த மாதிரி போலி பத்தி என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு...நம்ம ஊர்ல வடக்கு, தெற்கு ரெண்டு தாலுகா ஆபீஸ்லயும் சுற்றுச்சூழல் பேர்ல வலம் வர்ற ஒரு என்.ஜி.ஓ.,நிர்வாகியும், ரெண்டு மூணு போலி நிருபர்களும் சேர்ந்து, அங்க வர்ற ஆளுங்களை எல்லாம் மடக்கி, 'நாங்க சர்ட்டிபிகேட் வாங்கித்தர்றோம்'னு சொல்லி, அஞ்சாயிரம், பத்தாயிரம்னு மக்கள்ட்ட பறிச்சிர்றாங்களாம்!''''அங்க இருக்குற ஆபீசர்களும் இந்தக் கூட்டணியில இருப்பாங்களே!''''இல்லை மித்து...இவுங்க கேக்குற சர்ட்டிபிகேட்டை கொடுக்காத ஆபீசர்களைப் பத்தி, கலெக்டரோட முக்கியமான பி.ஏ.,கிட்ட தாறுமாறா போட்டுக் கொடுத்துர்றாங்களாம்...அவர் அந்த ஆபீசர்களைக் கூப்பிட்டு, 'ஏங்க அவுங்களைப் பகைச்சுக்கிறீங்க. கேக்குறதை செஞ்சு கொடுங்க'ன்னு சொல்றாராம். அவர் பேரை வச்சு, ரெண்டு ஆபீஸ்கள்லயும் இவுங்க அடிக்கிற கொட்டம் தாங்கலைங்கிறாங்க!''''அக்கா...போலி மாதிரியே பொய்க்கணக்கும் எழுதுறாங்க...நம்ம டிஸ்ட்ரிக்ட்ல ஒரு நாளுக்கு 8 ஆயிரம் பேருக்கு மேல கொரோனா டெஸ்ட் எடுக்குறாங்க....இப்போ ஸ்கூல், காலேஜ் ஆரம்பிச்சிட்டதால, நோய் பரவல் அதிகமாக நிறையவே வாய்ப்பு இருக்கு... ஆனா கொஞ்சமா டெஸ்ட் எடுத்துட்டு நிறையா எடுக்குறதா பொய்க்கணக்குக் காமிக்கிறாங்களாம்!''மித்ரா சொல்லி முடிக்கும் முன், குறுக்கிட்ட சித்ரா, 'தாகமா இருக்கு மித்து...ஏதாவது குடிக்கணும்...வா கிளம்பலாம்!'' என்று வண்டியை நோக்கி விரைந்தாள்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement