சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் உள்ள அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 24 வீடுகள் கொண்ட ‛டி பிளாக்' உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்றிரவு (டிச.,26) திடீரென விரிசல் ஏற்பட்டு சத்தம் கேட்டதால், அதில் குடியிருக்கும் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற துவங்கினர்.

இந்நிலையில், இன்று காலை திடீரென அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டமானது. பொதுமக்கள் அவரவர் வீடுகளில் இருந்து முழுவதுமாக வெளியேறிய சிறிது நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உயிர் சேதம் எதுவும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என 5 தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடிசை மாற்று வாரியம். எல்லோருக்கும் குடிசையா மாத்திக் குடுத்துருங்க. ஆட்டையப் போட்டது போறும்.