ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்
தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் பலருக்கும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் தலைமறைவானார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வரவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீசை போலீசார் வழங்கி உள்ளனர். தலைமறைவானவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து 9 நாட்களாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர்.
வாசகர் கருத்து (62)
காசு வாங்கி கம்பி நீட்டியதால் பாலாஜிக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும் மோசடி செய்துவிட்டார் என்று புகார் கொடுத்தவர்களும் புனிதர்கள் அல்லர். வேலை வாங்க லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். பாலாஜிக்கு 5 ஆண்டு தண்டனை என்றால் லஞ்சம் கொடுத்து இடம் வாங்க முயன்றவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாவது தண்டனை கொடுக்க வேண்டும்.
எந்த கட்சிக்காரன் தவறு செய்தாலும் அவனை தண்டிக்கவேண்டும்... இந்த தண்டனை மற்ற MLA MP களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்... மிக கடுமையான தண்டனை தரப்படவேண்டும்..
சாயிராம். இந்த வழக்கு பொய்யோ, மெய்யோ தெரியாது. ஆனால், உண்மையிலேயே பணம் வாங்கி இருந்தால், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால் பிரச்சனைதான் இல்லையே. சட்டப்படி தவறு இல்லை என்று ஏற்கனவே நமது திமுக அமைச்சர் கரூர்காரர் அவர்கள் தான் வழிகாட்டி விட்டாரே. சாயிராம்.
சாயிராம். இந்த வழக்கு பொய்யோ, மெய்யோ தெரியாது. ஆனால், உண்மையிலேயே பணம் வாங்கி இருந்தால், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால் பிரச்சனைதான் இல்லையே. சட்டப்படி தவறு இல்லை என்று ஏற்கனவே நமது திமுக அமைச்சர் கரூர்காரர் அவர்கள் தான் வழிகாட்டி விட்டாரே. சாயிராம்.
டாடியை நம்பி ஏகப்பட்டதிற்கு ஊழல் செய்துவிட்டார். டாடி காப்பாற்றவில்லையென்றதும், ஓடி ஒளிந்து கொள்கிறார்.