ADVERTISEMENT
லக்னோ: ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக மத்திய பிரதேசத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்திலும் இரவுநேர ஊரடங்கு நாளை (டிச.,25) முதல் அமலாகும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லையென்றாலும், அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ம.பி.,யை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த உத்தரவு அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தினமும் இரவு 11 முதல் காலை 5 மணிவரை இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மேலும், நாளை முதல் மாநிலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லையென்றாலும், அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ம.பி.,யை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த உத்தரவு அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை தடை செய்யுங்கள்... அந்த நேரத்தில் ஒரு பயலும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள்.....