Load Image
dinamalar telegram
Advertisement

60 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி: மத்திய அரசு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவில் 60 சதவீதம் பேருக்கு கோவிட் தடுப்பூசியின் இரு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கோவிட் பரவலை தடுக்கும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன. தற்போது ஒமைக்ரான் தொற்று பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகளவு தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இன்று (டிச.,23) காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 139.69 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Latest Tamil News
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், ‛நமது சுகாதாரப் பணியாளர்களின் பங்கேற்பு மற்றும் அர்ப்பணிப்பு முயற்சியால், தகுதியான மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்போது முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்,' எனத் தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து (4)

  • Visu Iyer - chennai,இந்தியா

    ஆறுமாதத்திற்கு ஒன்று.. ஆண்டுக்கு இரண்டு.. அத்தனையும் இலவசம் என்று இனி தேர்தல் அறிக்கை வரும் என்று தான் தோன்றுகிறது என யாராவது சொல்லிக்கிட்டு வர போறாங்க.

  • Visu Iyer - chennai,இந்தியா

    முதல் தடுப்பூசிக்கு வயது ஒன்று ஆகி விட்டத்டு.. சரி அடுத்த தடுப்பூசிக்கு மக்களை தயார் செய்ய வேண்டியது தான்.. இனி வருடத்திற்கு இரண்டு தடுப்பூசி என பழக்கமாகிவிடும்.

  • Visu Iyer - chennai,இந்தியா

    தடுப்பூசிக்கு கட்டுப்படாத வைரஸ் வர போகுது என்பதை புரிந்து கொள்ள என்பதை புரிந்துகொள்ள முடிகிறது

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    தமிழனுக்கே பெருமை "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி"

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement