லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்தது. ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீதிமன்றத்தில் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, 2வது மாடியில் உள்ள கழிவறையில் மர்மப்பொருள் வெடித்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் லூதியானா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அங்கிருந்தவர்கள் பயத்தில் வெளியேறினர். இந்த சம்பவத்தில், அந்த கட்டடத்தின் சுவர், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். நீதிமன்ற வளாகத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் சில தேச விரோத மற்றும் சமூக விரோத கும்பல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அரசு விழிப்புடன் உள்ளது. மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.
லூதியானா போலீஸ் கமிஷனர் குருபிரீத் சிங் புல்லார் கூறுகையில், நீதிமன்ற வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தடயவியல் துறை அதிகாரிகள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளனர்.

Immaturity theeviravaatham murayileye killidanum .