Load Image
Advertisement

தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு;3 பேர் நலம்

சென்னை: புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த வைராசல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் பாசிட்டிவ் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது. அதில் 3 பேர் நலமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Latest Tamil News



2 வது ஆண்டாக கோவிட் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது ஒமைக்ரான் என்ற புதிய கோவிட் உலகம் முழுவதும் பரவ துவங்கி இருக்கிறது. இது மிக மோசமானதாக இருக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.


இந்தியாவில் இன்று 7,495 பேருக்கு கோவிட் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒமைக்ரான் வைரசால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 104 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது.
Latest Tamil News

மாலையில், கிண்டி இன்ஸ்டிடியூட்டில் ஆய்வு செய்த பின்னர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இன்று ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 33 பேருக்கும் ஒரே நாளில் தொற்று உறுதியாகவில்லை. கடந்த 20 நாட்களில் அனுப்பப்பட்ட மாதிரி முடிவுகள் இன்று வந்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட முதல் நபர் உட்பட 3 பேர் நலமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களை அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (7)

  • Godyes - Chennai,இந்தியா

    உலகத்தை அழிப்பதற்கேன்றே ஒரு கயவர் கூட்டம் முனைப்புடன் செயல் படுகிறது. எல்லாரையும் அழித்து விட்டு இவர்கள் மட்டும் வாழ முடியுமா.

  • Godyes - Chennai,இந்தியா

    ஒண்ணு போனா இன்னொண்ணு வந்துகினே கீதேபா எவனோ இதெல்லாம் ரகசியமா அவுத்து வுட்டுகினு கீறான்

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஊடகங்கள் மனதுவைத்தால் ஒமைக்கரான் இல்லாத மாநிலமாக தமிழகத்தை காட்டமுடியும். தீயசக்ததிகளின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.

  • raja - Cotonou,பெனின்

    பிச்சை போட்ட மக்களின் விழாக்களான கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு பிறகு விடியலு முழு அடைப்பு என்று சொல்லுவாரு....

  • N.GIRIVASAN - Chennai,இந்தியா

    பொது மக்கள் கூடும் எல்லா இடங்களும் தடை செய்யப்பட வேண்டும். அத்யாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற இடங்களை, கடைகளை சனி ஞாயிறு கிழமைகளில் கண்டிப்பாக மூட வேண்டும். இதை உடனடியாக செய்ய வேண்டும்.முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.செய்தல் பெருமளவு தொற்றை தடுக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement