dinamalar telegram
Advertisement

சமத்துவ பொங்கலால் ம.தி.மு.க.,வில் சர்ச்சை

Share
கோவை: சமத்துவ பொங்கல் விழா விளம்பரத்தில், அவைத் தலைவர் துரைசாமி பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதால், அவ்விழாவில் பங்கேற்கும் தலைமை நிலைய செயலர் துரை வைகோவுக்கு, கொங்கு மண்டல ம.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க.,வில் உள்ள மும்மத மகளிர் சார்பில், ஜன., 14ல் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது. இந்நிகழ்ச்சியை, கட்சி அவைத் தலைவர் துரைசாமியின் சொந்த ஊரான திருப்பூரில் நடத்த, துரை வைகோ ஏற்பாடு செய்துள்ளார்.ஆனால், இது தொடர்பான விளம்பரங்களில் துரைசாமி பெயர் இடம்பெறவில்லை. இதனால், கொங்கு மண்டல நிர்வாகிகளும், துரைசாமி ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் துரை வைகோவுக்கு எதிராகவும், துரைசாமிக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். அதன் விவரம்:

* சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்; ஆனால், கட்சியில் சமத்துவம் இல்லை. அண்ணாதுரை காலத்து அரசியல் தலைவர்களில் ஒருவர், தொழிற்சங்கத் தலைவருக்கு அழைப்பு இல்லை. வாரிசு அரசியலை எதிர்த்ததால் அவமரியாதை செய்யப்படுகிறார்

* உட்கட்சி ஜனநாயகம் இல்லை. கூஜா, பல்லாக்கு துாக்கினால் நல்லவர்கள். 28 ஆண்டு அரசியல் பயணம் வீணாகி விடடது. வைகோவை நம்பி மோசம் போய் விட்டோம்

* மண்டல நிர்வாகிகளை அழைக்காமல் அவமதித்து, ஜால்ரா அடிக்கும் நிர்வாகிகளை அழைத்து, அரசியல் செய்து கொள்ளட்டும். புறக்கணிப்போம் சமத்துவ பொங்கலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (30)

  • Hari - chennai,இந்தியா

    கட்டுமரம் இன்னும் மிதக்கிறது என அய்யப்படவேண்டி உள்ளது தமிழனுக்கு .

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    கூடா நட்பு -மதிமுக ,திமுக நட்பு. இதனால் அழியப்போகும். அழிந்து விட்ட கட்சி வைகோவின் மதிமுகவே ஸ்டாலினை பார்த்து தலையை வைகோ முடிந்து கொள்வது சரியாக இருக்காது. இப்போதைக்கு ஸ்டாலின் முடி இல்லைன்னாலும் விக் 'வைத்துக்குக் கொண்டுள்ளார் ஆனால் வைகோவோ அவரை பார்த்து தனது வரிசையும் 'உள்' புகுத்தியது சரிவராது

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Kadayai pillai kitte koduthaachu ini chinna muthalaali vachathuthaan sattam

  • Nachiar - toronto,கனடா

    சூரிய தேவனுக்கும் கோமாதாவுக்கும் இந்து முறைப்படி பொங்கல்.

  • kanisha - CHENNai,இந்தியா

    மண் குதிரையை நம்பி சவாரி செய்ய ஆசைப்பட்டால் அது உங்கள் தவறு

Advertisement