Load Image
dinamalar telegram
Advertisement

நிதித்துறை வளாக பெயர் மாற்றம்: அதிமுக எதிர்ப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: நிதித்துறை வளாகத்திற்கு சூட்டப்பட்ட அம்மா வளாகம் என்ற பெயரை மாற்றிவிட்டு, பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டுவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில், அதிமுக ஆட்சி காலத்தில் நந்தனத்தில் அமைந்துள்ள நிதித்துறை வளாகத்திற்கு 'அம்மா வளாகம்' என பெயர் சூட்டப்பட்டது. அந்த பெயரை நீக்கிவிட்டு, 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளன. அன்பழகன், நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு இலாகாக்களின் அமைச்சராக இருந்தவர். அங்கு, சிலை வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
Latest Tamil Newsஅதேசமயத்தில், பெயரை மாற்றுவது நாகரீகமற்ற செயல். ஒருவரை இழிவுபடுத்திவிட்டு, மற்றொருவரை புகழ்வது போல் ஆகும். இதுபோன்ற செயல், தமிழ் பண்பாட்டிற்கு தமிழ் கலாசாரத்திற்கு எதிரான செயல். பெயர் மாற்றம் செய்யப்படுவது அநாகரீகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். பெயரை மாற்றுவதை உடனடியாக கைவிட வேண்டும். புதியதாக வேறு மாளிகை தமிழக அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயர் சூட்டலாம் என்றும் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (13)

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    //அவர் கஷ்டப்பட்டு கட்டிய சட்டசபை// ஹிஹி....அதிமுகவில் ஆயிரம் அடிமைகள் இருக்கலாம்.... ஆனால் கொத்தடிமைகள் என்றால் அது ஊபீஸ்தான்....

  • Indhuindian - Chennai,இந்தியா

    பெரியாரின் உண்மையான சீடன் அவர் காட்டிய வழியில் சிறிதும் பிலாகாது நடை முறையில் காட்டியவர். தன்னுடைய மகளின் கல்லூரி தோழியை மணந்தவர் இவருக்கு பெரியார் விருது கொடுத்து மற்றும் சிலை வைத்து எல்லா மரியாதையும் செய்வதே திராவிட சித்தாந்தத்தை போற்றும் வளர்க்கும் வழி

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    கடைசிவரை அரசாங்க காசிலேயே வாழ்ந்த இரண்டாவது தலை முதல் தலை கட்டுமரம். பேசாமல் கருணாநிதி மனைவி பெயர் தயாளு என்று வைத்து இருக்கலாம்.

  • அருணாசலம், சென்னை - ,

    அவர் பச்சையப்பன் கல்லாரியில் டியுடராக (tutor) வேலை செய்தவர். இவனுக பேராசிரியராக மாத்திட்டானுங்க.

  • ஆரூர் ரங் -

    பெற்ற மகளின் கல்லூரித்தோழியை மணந்த தியாகி 😉பெயர் ? மிக்க பொருத்தம் தான்

Advertisement