Load Image
dinamalar telegram
Advertisement

ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகுது; இரண்டரை ஆண்டுதான் திமுக ஆட்சி: எடப்பாடி ஆரூடம்

Tamil News
ADVERTISEMENT
சேலம்: சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 'ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போவதாகவும், இன்னும் இரண்டரை ஆண்டுதான் தி.மு.க ஆட்சி இருக்கும்' எனவும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: சேலம் என்றால் அது அ.தி.மு.க.,வின் கோட்டை. எம்.ஜி.ஆரின் காலத்திலும் சரி, ஜெயலலிதாவின் காலத்திலும் சரி, இப்போதும் சரி, சேலம் எப்போதும் அ.தி.மு.க.,-வின் கோட்டை. அ.தி.மு.க-.,வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது. எங்களை யாராலும் அசைக்க முடியாது. ஏன் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்கமுடியாது. அ.தி.மு.க.,வினரை பழிவாங்க நினைத்தால், அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். ரெய்டு நடத்தினால் நாங்கள் பயந்துவிடுவோமா? எங்கள் ரத்தத்தில் வீரம் ஊறியிருக்கிறது.
Latest Tamil Newsதி.மு.க அரசின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். அ.தி.மு.க.,வினர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை, எதனையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். சென்னை கன மழையால் மிதந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் திரைப்படத்தில் வருவதுபோல நடந்தார், போஸ் கொடுத்தார், டீ குடித்தார், பின்னர் போய்விட்டார். 'அம்மா' சிமெண்டை விலையை ஏற்றி 'வலிமை' சிமெண்ட் என்று கொடுக்கிறார்கள். வலிமை சிமெண்டாம், நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்டா கொடுத்தோம்?. இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் தி.மு.க ஆட்சி இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அதனை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும். அ
Latest Tamil Newsகடந்த ஆண்டு எங்கள் ஆட்சியில் வழங்கியது போல் அடுத்த ஆண்டும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 வழங்க வேண்டும். தி.மு.க அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க பலமுறை குரல் கொடுத்தும் விடியாத அரசு செவி சாய்க்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (57)

 • Arachi - Chennai,இந்தியா

  கொள்கை அளவில் கட்சிகளை அதாவது சித்தாந்தாத்தை புகுத்தும் அடிப்படையில், அரசியல் மூலம் தனது மூலதனத்தை பெருக்கி கொள்வது மற்றொன்று எல்லாமும் எல்லா மக்களுக்காக தன்னலம் பார்க்காது அரசியலைப் பயன்படுத்துவது என மூன்று வகையாகப் பிரிக்கலாம் அதாவது முதல் இரண்டு வகைகளும் முற்போக்குமல்ல பிற்போக்குமல்ல புறம்போக்கு கட்சிகள்.

 • முருகன் -

  பதவி ஆசை. கனவிலும் ஆட்சிக்கு வர முடியாது என்பதே உண்மை

 • kulandai kannan -

  ஸ்டாலின் காதுகளில் புகை

 • Ramaraj P -

  அ.தி.மு.க, தி.மு.க-வை விட வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்தார். ஏனெனில் அப்போது தான் திராவிட ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்பது அவரின் சாணக்கியர் தனம்.ஆனால் இப்போது இருப்பவர்கள் அ.தி.மு.க இல்லை என்றால் தி.மு.க தான் எப்போதும் இருக்கும் என நினைக்கிறார்கள் அது தவறு. அ.தி.மு.க இல்லாமல் போனால் நாம் தமிழர் அல்லது பா.ஜ.க வந்து விடும் இது திராவிட ஆட்சியை இல்லாமல் செய்து விடும். நான் தி.மு.க எதிரி தான் ஆனாலும் தி.மு.க இப்போது செய்வது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி விடும்.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  ரொம்ப நல்லது நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் உங்கள் ஊழல் வந்து கொண்டு இருக்கிறது , KRIPTO வில் INVEST செய்த முதல் மந்திரி என்கிற பெரும உங்கள் கட்சிக்கு தான் , நீ கொடநாடு வழக்கில் உள்ளே இருக்கப்போகிற , அப்படியே மக்கள் மனநிலையில் இப்போ தேர்தல் வெச்சாலும் 160 seat dmk க்கு கிடைக்கும் , பெண்கள் பஸ்ஸில் இலவசம் ஒன்று போதும்

Advertisement