Load Image
Advertisement

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழக மாநில பாடலாக அறிவிப்பு

 தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழக மாநில பாடலாக அறிவிப்பு
ADVERTISEMENT

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக மாநில பாடலாக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடக நூலான மனோன்மணீயம் நூலில் 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970ம் ஆண்டு நவ.,23ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார். அவ்வரசாணையை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது.

Latest Tamil News
இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. இப்பாடல் வரிகளை 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்பட வேண்டும். தமிழகத்தில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களை கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (92)

 • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

  தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி ஈ. வெ. ராமசாமி செய்த வியாக்ஞானம் " நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால், உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்குப்பதில் இன்னொரு முட்டாள்தனமா ? 'விடுதலை' இதழ், 13-04-1972

 • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

  1. பாரதியின் தாய் மொழி வாழ்த்து இதோ 2.வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே 3. ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழிய வே 4. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய வே 5. சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே 6. தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே 7. வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே 8. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே என்ற மேற்கூறிய பாடலை நம் அருமைத்தாய் மொழி வாழ்த்தாக அமைத்து, இழந்து போன தமிழின் பெருமையை நாம் மீட்போம் என்று என் மருந்தனைய தமிழ் மக்களிடம், அன்பு மிகக்கொண்டு வேண்டுகோள் விடுக்கிறோம்

 • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

  சுந்தரம் பிள்ளையை விளாசித்தள்ளிய பாரதி : சுந்தரம் பிள்ளை, தன் நூலில் திராவிடத்தை உருவாக்கப்படுத்திச் செய்திருக்கும் பிதற்றல் கருத்துக்களைக் கண்டு, வெகுண்டு பொங்கிய பாரதி, தன் கோபத்தையெல்லாம் திரட்டி, ‘சின்ன சங்கரன் கதை' என்ற நூலில், தனது அங்கத்தக்கருத்துக்களால் சவுக்கடி தந்து, சுந்தரம் பிள்ளையை விளாசித்தள்ளி விடுகிறார். “...திருவணந்தபுரம் பெரிய கலாசாலையில் தமிழ்ப்பண்டிதராகி, அந்நிய பாஷைகள் ஆயிரங்கற்று நிகரில் புலவர் சிகரமாக விளங்கிய சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய நூல்கள் ஏதேனும் ஒன்றை எப்போதாவது தலையணையாக வைத்துப்படுத்திருந்ததுண்டா ? அல்லது அவர் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியை மோந்து பார்த்ததுண்டா ? அப்படி மோந்து பார்த்தவர்களையேனும் மோந்து பார்த்ததுண்டா ? ” என்று கிண்டலாகக்கேட்கிறார் பாரதியார். அது மட்டுமல்ல. நீராருங்கடலுடுத்த என்னும் பாட்டில் நிலமடந்தைக்கு திராவிடத்திலகமாக வைத்திருக்கும் உருவகத்தை ' தென் பாண்டி நாட்டிலே, பூமி தேவிக்கு திலகம் வைத்து அது உலர்ந்து போயிருப்பது போலக்கவுண்டபுரம் என்ற நகரம் திகழ்ச்சி பெற்றது.' என்றும் சொல்லிக்கிண்டல் செய்திருக்கிறார் சுப்பிரமணிய பாரதியார். எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றியது மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்பது தவறானக்கருத்தாகும். அவர் இயற்றியதோ தமிழ்த்தெய்வ வணக்கம் ஆகும். ஆனால், பரி, நரியாகிய கதையாக இந்தத்தமிழ் தெய்வ வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டது. இப்படி, கருத்துப்பிழைகள் நிரம்பிய ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை 1970-ல் அந்நாளைய முதல்வராக இருந்த திரு. மு. க. கருணாநிதி , தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற பாடலாக அறிமுகப்படுத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர், தமிழ்த்தாத்தா உ.வே. சா.வின் மாணவர் வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள். மற்றொருவர், கவியரசு கண்ணதாசன். இந்த இரண்டு பேருமே தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில் ' நீராருங்கடலுடுத்த நிலமடந்தை...' எனும் பாடலை மிகக்கடுமையாக எதிர்த்தார்கள். அத்தகைய தமிழறிஞர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாது , அந்நாளைய தமிழக அரசு இந்த சுந்தரம் பிள்ளையின் பாடலை அரசுப்படலாக அறிவித்தது.

 • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

  பெ. சுந்தரம் பிள்ளையின் உண்மைப்பின்னணி : மனோன்மணியம் எழுதிய பெ. சுந்தரம் பிள்ளையின் உண்மை சொரூபம் என்னவென்று பார்க்க வேண்டும். அவர் தமிழரா ? அது தான் இல்லை. அவர் கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்த கொச்சு மலையாளி . இதை அந்த சுந்தரம் பிள்ளையே தன் தமிழ்த்தெய்வ வணக்கத்தின் 42 -43 வரிகளில் ஒப்புக்கொள்கிறார். ' அடியேன் கடையேன் அறியாச்சிறியேன். கொடுமலையாளக்குடியிருப்புடையேன்.' எனத்தன் இருப்பு அடையாளத்தை , மலையாள நாடாகிய கேரளா தான் என்று சொல்லி, தான் ஒரு மலையாளத்தான் என்று சொல்லிக்கொள்கிறார். இந்த மனோன்மணியம் நாடக நூலில், மறைமுகமாக ஆன்மீகக்கருத்துக்களும் உள்ளன. இதில், பாண்டிய நாட்டு மன்னனாக ஜீவகவழுதி என்பவன் ஜீவாத்மாகக்கொள்ளத்தக்கவன். திருவனந்தபுரத்திலிருந்து ஆண்ட சேர மன்னன் புருடோத்தமனை பரமாத்மாவாகக் காட்டியுள்ளார்.

 • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

  இந்தத்தமிழ்த்தாய் வாழ்த்தின் கடைசி வரியைப்பாருங்கள். ' சீரிளமைத்திறம் வியந்து , செயல் மறந்து வாழ்த்துதுமே ' என்கிறது. நம் பாரதம்,ஒரு சிறந்த வல்லரசாக வேண்டும் என்று மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் விரும்பினார். எனவே, பாரதம் வல்லரசாக வேண்டுமானால், அதற்கான செயல் புரிந்து வாழ்த்தினால் தான், அது வல்லரசு ஆகும். எனவே, கால காலத்திற்கும், தமிழ் நின்று நிலைத்திருக்க வேண்டுமானால், செயல் மறந்து வாழ்த்துவதா ? அல்லது செயல் புரிந்து வாழ்த்துவதா ? செயல் புரிந்தல்லவா வாழ்த்த வேண்டும் ? 'செயல் மறந்து வாழ்த்துதுமே ' என்று சொல்லித்தினமும் பாடுவதால், நம் அருமைத்தமிழ் மொழியும், தமிழ் இனமும், செயல் மறந்த நிலைக்குத்தள்ளப்படுகிறது. ஐயோ நம் இனிய தமிழ் மொழியின் நிலையோ ரொம்பப்பரிதாபம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement