Load Image
dinamalar telegram
Advertisement

பழநியை புனித நகராக அறிவிக்க வேண்டும்: சிரவை ஆதீனம்

கோவை: பழநியை புனிதத் திருநகராக அறிவித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Latest Tamil News

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:புகழ்பெற்ற புனிதத் தலம் காசி. அங்குள்ள ஆலயம் சிறியதாக இருந்தது. பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் அக்கோவில் 5 லட்சம் சதுர அடிக்கும் மேலாக விரிவுப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் கூடும் அளவுக்கு ஏராள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் தமிழகத்தில் முக்கியக் கோவில்களை விரிவுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக பழநி கோவிலை விரிவுப்படுத்த வேண்டும். லட்சக் கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் ஆன்மிக பூமி அது. புனித நகரான காசியில் மது, இறைச்சி விற்பனைக் கடைகள் இல்லை; அதுபோல் பழநியைச் சுற்றிலும் குறிப்பிட்ட தொலைவுக்கு மது, இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதிக்க வேண்டும்.
Latest Tamil News
புனிதத் தலமாக அறிவித்து, கழிப்பிடம், நீராடல் வசதிகளை அதிகரிக்க வேண்டும். திருப்பதியில் செயல்படுவது போல் ஏராளமான போக்குவரத்து வசதிகள், ஆன்மிக சுற்றாத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (12)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    நல்ல வேண்டுகோள். பழனியை ஒரு புனித நகரமாக அறிவித்து கோவிலை சுற்றிலும் சுமார் பத்து கிமீ அளவுக்கு மது மாமிசம் விற்பதை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். தேவஸ்தான இடங்களில் இந்துக்களுக்கு மட்டுமே கடைவைக்க அனுமதிக்க வேண்டும்.

  • Radhakrishnan Subramanian - Mahé,செசேல்ஸ்

    அதற்கு கடை நடத்துகிற அனைத்து திருடர்களையும் அப்பறப்படுத்தணும்.

  • Kutti Ravi - coimbatore,ரூவான்டா

    மிகவும் சரியான கோரிக்கை நிச்சயம் நடக்கும் பழனி விரைவில் புனித நகரம் ஆகவேண்டும்

  • Indhuindian - Chennai,இந்தியா

    நல்ல கருத்து ஆனால் நாம் இருப்பதோ நாத்திகர்கள் ஆளும் பூமி

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    கார்த்திகை நட்சத்திரத்தில் குமார குருபர சாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார் நிச்சயம் நடக்கும்.

Advertisement