dinamalar telegram
Advertisement

2022ல் நிலவுக்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டம்

Share
புதுடில்லி :அடுத்த ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ 'ககன்யான்' திட்டத்தின் கீழ் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது. இது குறித்து மத்திய விண்வெளி துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் லோக்சபாவில் கூறியதாவது:இருமுறை ஏற்பட்ட கொரோனா அலை காரணமாக, விண்கலத்திற்கு தேவையான பொருட்கள் தயாரிப்பு பாதிக்கப்பட்டது. அதனால் ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் தாமதமானது.

அடுத்த ஆண்டு இந்தியாவின், 75வது சுதந்திர தின விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
இந்த பயணத்திற்கு முன்பாக, 2022 மத்தியில் நிலவுக்கு ஆளில்லாத இரு விண்கலங்களை அனுப்ப உள்ளோம். கடந்த, 2016 - 21 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில், 27 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இது தவிர, இந்திய பல்கலைக்கழக மாணவர்களின், எட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    சீனாவிடமிருந்து இஸ்ரோ மென்பொருள் வாங்குவதாக செய்திகள் வந்ததே?

  • Sounderrajan - Coimbatore ,இந்தியா

    பிறகு மனிதர்களை பற்றி பேசலாம்

  • Sounderrajan - Coimbatore ,இந்தியா

    முதலில் லேண்ட் ரோவர் வெற்றியடையட்டும்.

  • Gane Ganesh -

    0...

Advertisement