ADVERTISEMENT
ஓசூர்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய கைத்தறி மற்றும்துணிநுால் துறை அமைச்சர் காந்தி, வாய்க்கு வந்ததெல்லாம் அவர் பேசுவதாககுற்றம்சாட்டியுள்ளார்.
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி இலங்கை தமிழர்கள் முகாமில் நலத்திட்ட உதவிகளைவழங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 106 இலங்கை தமிழர்கள் முகாமில், வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை, 3,000 கோடியில் செய்வதாக அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். மகளிர் குழுக்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட, 3,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனை, 2,700 கோடியை தள்ளுபடி செய்துள்ளார். தமிழகத்தில் முன்மாதிரியாக இதுவரை யாரும் செய்யாததை முதல்வர் செய்து வருகிறார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்பான இடங்களில் நடக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, பழிவாங்கும் நோக்குடன் ஏன் செய்ய போகிறோம். 10 ஆண்டுகளாக என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாததா? . அவர் செய்ததற்கு இது ரெம்ப கம்மி என்றார்.
தொடர்ந்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க., அரசு கருத்து சுதந்திரத்தை தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அவன் ஒரு தலைவரு, அவனை பற்றி பேசுறியே நீ. அவனை ஒரு தலைவருன்னு நீயும் ஏத்துகிறியே. அவன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறான். ஒரு படித்தவன் என்ன பேசணுமோ அத பேசணும். ஒரு தகுதி இல்லாத வார்த்தை பேசக்கூடாது. பவர் என்பது நிரந்தரமாக இருக்காது. அவன் எந்ததைரியத்தில் பேசுறான். மத்தியில் அரசு இருக்குன்னு பேசுறான். அதை நம்பி அந்த மாதிரி பேசக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி இலங்கை தமிழர்கள் முகாமில் நலத்திட்ட உதவிகளைவழங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 106 இலங்கை தமிழர்கள் முகாமில், வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை, 3,000 கோடியில் செய்வதாக அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். மகளிர் குழுக்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட, 3,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனை, 2,700 கோடியை தள்ளுபடி செய்துள்ளார். தமிழகத்தில் முன்மாதிரியாக இதுவரை யாரும் செய்யாததை முதல்வர் செய்து வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
திமுகவுக்கு பல்லக்கு தூக்கும் இந்த மாதிரி ஆட்கள் மீது பிஜேபி உடனே வழக்கு தொடுக்கவேண்ண்டும் மாரிதாஸ் அவர்களின் மீது ஒன்றன்பின் ஒன்றாக வழக்குகளை போட்டு இந்த திமுக அரசாங்கம் அவரை ஜெயிலில் இருந்து வெளிவரமுடியாமல் செய்து தங்கள் அராஜகத்தை வெளிப்படுத்துகிறது அண்ணாமலையை அவன் இவன் என்று ஆபாசமாக பேசிய இந்த அயோக்கியன் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜெயிலில் அடைக்கவேண்டும்