Load Image
dinamalar telegram
Advertisement

நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவும் ஒமைக்ரான்: உலக சுகாதார அமைப்பு

Tamil News
ADVERTISEMENT
ஜெனிவா: உலகம் முழுவதும் பரவிவரும் ஒமைக்ரான் தொற்று, நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகின்றன. இது தொடர்பாக ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதுவரை 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில நாடுகளிலும் கண்டுபிடிக்கப்படாமல் ஒமைக்ரான் பரவியிருக்கலாம். இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட டெல்டா உட்பட எந்த உருமாற்ற வைரசும் இப்படி ஒரு வேகத்தில் பரவியதை நாங்கள் பார்க்கவில்லை. நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவும் ஒமைக்ரானை சில நாடுகள் குறைத்து மதிப்பிடுகின்றன.
Latest Tamil Newsஒமைக்ரான் கடுமையான பாதிப்பை குறைந்த அளவில் ஏற்படுத்தினாலும், அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மீண்டும் கையாள முடியாத வகையில் சுகாதார அமைப்புகளை மூழ்கடிக்கக்கூடும். தடுப்பூசியால் மட்டுமே ஒமைக்ரானை தடுக்க முடியாது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் போன்றவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும். மேலும் தடுப்பூசி திறனை கணிசமான அளவில் ஒமைக்ரான் குறைப்பதாக சில தடுப்பூசி நிறுவனங்கள் கண்டறிந்துள்ளது, அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (15)

 • கவிஞன் பலா - Chennai,இந்தியா

  வாழ்க வையகம்

 • Sampath kumar Muthusamy - Sankagiri( tamilnad),இந்தியா

  உலக மக்களை பீதிக்குள்ளாக்குவதற்கு மட்டுமே இந்த மாபெரும் அறிவாளி இந்தப் பதவியில் இருக்கிறாரா அல்லது இந்த வைரஸ் பிரச்சினை தீரவே கூடாது என்று நினைக்கிறாரா?

 • Raman - kottambatti,இந்தியா

  அடுத்த வியாபாரதுக்கு மருந்து ரெடி. இனிமே வருடா வருடம் ஒரு வைரஸ் (பெயர் மற்றம் செய்து) வந்துகொண்டே இருக்கும் போல.. மற்ற நோய்கள் எல்லாம் மக்கள் மறந்து விடலாம். மருந்து சாப்பிட தேவை இல்லை.. ஹி ஹி ஹி

 • ஸ்ரீராம்  - CHENNAI,இந்தியா

  இதன் தாக்கத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.  எனினும் இது வெவ்வேறு நாடுகளில் பரவும்போது மறுபடியும் ஏதாவது உருமாற்றம் அடையும் பட்சத்தில் அது ஆபத்தானதாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. 

 • ராம.ராசு - கரூர்,இந்தியா

  உலகப் பொருளாதாரமே ஆட்டங்கண்டு இருந்தபோது இந்தியப் பொருளாதாரம் கொஞ்சமும் பாதிக்கப்படவில்லை இருந்தது ஒரு காலத்தில். உலகத்தில் இவ்வளவுதான் நோய்களே அதற்கான மருந்துகள் என்று உணவுப் பொருட்களையே மருந்தாகச் சொன்னது நமது பாரம்பரிய சித்தவைத்திய முறை. டெங்கு போன்ற காய்ச்சலுக்கு, அலோபதி மருத்துவத்தில் மருந்தே இல்லை என்றபோது, எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு கஷாயம் குணப்படுத்திக்கொண்டு இருக்கிறது என்பதை முழுமையாக மக்களுக்குச் சொல்லப்படவில்லை. இவ்வளவு ஏன், கொரோனா வைரஸுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்று சொன்னபோது, சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைக்கு கொடுக்கப்பட்டு, அனைவருமே நலம் பெற்றது நாடறிந்தது. அதோடு கூட ஹோமியோபதி மருத்துவத்தில் எஆர்எஸ் ஆல்பம் 30 என்ற மருந்து சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை கூப்பாடு போட்டுச் சொன்னார்கள். அதை ஆயுஷ் மருத்துவத் துறையும் அங்கீகரித்தது. ஆனால் அத்தனையும் புறந்தள்ளிவிட்டு... முகக் கவசம், இரட்டை முகக் கவசம், அடிக்கடி சோப்புப் போட்டுக் கையைக் கழுவுதல், இடைவெளி விட்டு இருத்தல், பிறகு தடுப்பூசி, இரண்டாவது தடுப்பூசி, (அடுத்து பூஸ்டர் என்றும் சொல்லப்படுகிறது) அடுத்து உருமாறிய கொரொனோ, டெல்டா வைரஸ் இதோ இப்போது ஒமிகிரானாம். அது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பரவுகிறது என்று மக்களை மேலும் மேலும் பயமுரித்திகொண்டே இருந்தால்.... மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாத நிலை உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மேக் இன் இந்தியா என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம், நம் நாட்டு மருத்துவத்தைக் கொண்டு வைரசால் ஏற்படும் பாதிப்புக்களை தீர்க்கலாம். அப்படிச் செய்தால் நமது மருத்துவத்தின் சிறப்பை உலகறியும்.

Advertisement