அவரது அறிக்கை:
வாய்மையே வெல்லும். இது, தமிழக அரசின் முத்திரை வாசகம். ஆனால், தமிழக அரசு வாய்மையில் இருந்து தவறி, பொய்மை பாதையில் நடப்பதை, நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. அறிவாலய தி.மு.க., அரசு தலை குனிய, வாய்மை மீண்டும் வென்றிருக்கிறது. சாமானிய மக்களின் சத்தியத்தின் மீதான நம்பிக்கைக்கு கடைசி புகலிடமாக இருப்பது நீதிமன்றம் மட்டுமே.இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக, மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.
-ஜாம்பவான்களை எல்லாம் போட்டுத்தள்ளிய நாம்-வெறும் வாய்ப்பேச்சு மாரிதாஸை பார்த்து பயந்துவிட்டோமே-என்ன தயா இதெல்லாம்-டாஸ்மாக்கை கடைசி வரையில் ஒழிக்கமாட்டோம் என்பது அவர்களுக்கு தெரியாதா? ஊழல் இல்லாமல் நம்மால் ஆட்சி செய்யமுடியாது என்பது மக்களுக்கு தெரியாதா ? எதற்கு நமக்கெல்லாம் சூடு சொரணை இருப்பதுபோல் காட்டிக்கொள்வது? சூடும் சொரனையும் இருந்தால் பல லட்சக் கோடிகளை பார்த்திருக்கமுடியுமா? மூலபத்திரத்தை கேட்டபோது கோபப்படவில்லையே-இப்போ ஏன் ?