Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பா ? அமைச்சர் விளக்கம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு கோவிட் உறுதியானது. மரபணுவில் மாற்றம் தென்படுகிறது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு நடந்த பரிசோதனையில் 37 பேருக்கு கோவிட் உறுதியானது. அவர்களது மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 4 பேருக்கு சாதாரண கோவிட் தான் என முடிவு வந்துள்ளது. மற்ற 33 பேரும் கிண்டி, நாகர்கோவில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை என பல இடங்களில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

Latest Tamil News
நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அந்த நபருக்கு கோவிட் மரபணுவில் மாற்றம் உள்ளது. அவரது குடும்பத்தினரிடம் நடந்த பரிசோதனையில் 6 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.இதனால், 7 பேரையும் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்றோ அல்லது நாளையோ முடிவுகள் வரும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • ஆரூர் ரங் -

    ஒரு ஓமைக்ரான் இருக்கும் தமிழ்நாட்டில் இன்னொரு வைரஸ்🤩 வரமுடியாது.

Advertisement