Load Image
dinamalar telegram
Advertisement

கங்கை நதியில் பிரதமர் மோடி புனித நீராடல்

Tamil News
ADVERTISEMENT
வாரணாசி: புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைக்க உத்தர பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, கங்கை நதிக்கரையில் புனித நீராடினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகம் 800 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
Latest Tamil News
இதற்காக உ.பி., சென்ற அவரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் அங்கிருந்து கால பைரவர் கோவிலுக்கு சென்ற மோடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். இதனைத்தொடர்ந்து படகில் சென்ற அவர், கங்கை நதியில் புனித நீராடினார்.


வாசகர் கருத்து (129)

  • Visu Iyer - chennai,இந்தியா

    Please don't repeat the same comment

  • J.Isaac - bangalore,இந்தியா

    உள்ளத்தில் புனிதம் உருவாக வேண்டும்.

  • Mohan - Thanjavur ,இந்தியா

    தங்க வந்தவர்கள் ஏன் இப்படி பொங்குகிறார்கள். கல்லறையில் வழிபடுவோரையும், கல்லெறிந்து வழிபடுவோரையும் இந்துக்கள் இப்படி புலம்பவில்லையே.

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    அட சங்கிகளா... ஒரு நாட்டின் பிரதமர் காமெராவின் முன் செய்யும் காரியமா இது? மத நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் தனி நபர் சம்பத்தப்பட்ட விஷயம்... நாட்டு மக்கள் வரிப்பணத்தில் கோயில் கட்டுமானம் செய்து, விழா எடுத்து, இப்படி கூத்துக்கள் நடத்துவது அதர்ம செயலே அன்றி நியாயப்படுத்த முடியாது...

  • சிவா - Aruvankadu,இந்தியா

    மோடி என்னும் மகான் பல்லாண்டு வாழ வேண்டும். இந்திய தேசத்தில் பதவிக்காக வேஷம் போட்ட தலைவர் என்று சொல்ல பட்டவர் அதிகம். ஆனால் மோடி என்ற மனிதர் இந்திய பிரதமர் ஆனது முதல் தலைவர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறார் . நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement