
கோவை, காந்திபுரத்தில் அச்சகம் நடத்தி வருபவர் நாசர், 52. நண்பரான வீடியோகிராபர் ஜோ பால், 52, உடன் சேர்ந்து 8ம் தேதி ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். காட்டேரி அருகே செல்லும்போது, ரயில் பாதையில் போட்டோ எடுப்பதற்காக இறங்கினர். அப்போது தான் முப்படை தளபதி உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
சத்தம்
சம்பவத்தை நேரில் கண்ட நாசர் கூறியதாவது: நாங்கள் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டது. ஜோ பால், அதை 'போகஸ்' செய்துவீடியோ எடுத்தார். ஓரிரு வினாடிகள் ஹெலிகாப்டர் பறப்பதை எல்லாரும் பார்த்தோம்.திடீரென மரத்தில் மோதி ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. எங்களுக்கு பயமாகி விட்டது; பதற்றம் ஏற்பட்டது. நான்கைந்து வளைவுகளில் சென்று பார்த்தோம். எதுவும் தெரியவில்லை. சம்பவ இடத்தை தேடி சென்றோம். அப்போது தான் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தன.அதில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, 'ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி விட்டது' என்றனர்.'அந்த சம்பவத்தை பார்த்தோம். எங்களிடம் அந்த வீடியோ உள்ளது' எனக் கூறி, டிரைவரிடம் அந்த வீடியோவை கொடுத்தோம்.
சந்திப்பு
மாலை வேளையில் தான், முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் வந்த ஹெலிகாப்டர் அது என்பது எங்களுக்கு தெரியும்.நாங்கள் நேரில் கண்ட சம்பவத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, நேற்று காலை கோவை போலீஸ் கமிஷனரை சந்தித்து தெரிவித்தேன். இவ்வாறு நாசர் தெரிவித்தார்.
இதை நான் இரண்டு நாட்கள் முன்னரே கூறிவிட்டேன், சீன தேசமும் நேற்று உறுதிப்படுத்தியது