Load Image
dinamalar telegram
Advertisement

மரணத்தை கொண்டாடும் தேசத் துரோகிகள்! தேசம் குமுறும்போது சிரிக்கும் தீயசக்திகள்

கோவை: முதல் முப்படை தளபதி உள்பட, 13 பேரை இழந்து நாடு அழுது கொண்டிருக்கும் நேரத்தில் தீய சக்திகளின் எண்ணம் சமூகவலைதளத்தில் பிரதிபலிக்கிறது.
Latest Tamil News

இந்திய முப்படைகளின் தளபதியாக பதவி வகித்த, 63 வயது பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள், 11 பேர் நீலகிரி, குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குன்னூரில் இருந்து சாலை மார்க்கமாக, 13 பேரின் உடல்கள் எடுத்து செல்லப்பட்டபோது ரோட்டின் இருபுறங்களிலும் எண்ணற்ற பொதுமக்கள் நின்று வீர்ர்களுக்கு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். உடல்கள் எடுத்து செல்லப்பட்ட வாகனங்கள் மீது கண்ணீர் மல்க பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் மலர் தூவி தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.

நாட்டின் முதல் முப்படை தளபதியான பிபின் ராவத்தின் அகாலமரணம் நாட்டையே உலுக்கி இருக்கிறது; பெரும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்களும் துயர சம்பவத்தால் பெரும் வேதனை அடைந்துள்ளனர். தேசப்பற்று கொண்ட மக்கள் அனைவரும் மரணமடைந்த ராணுவ அதிகாரிகளுக்கு, கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செய்தும் வருகின்றனர்.

தமிழகத்தின் பல ஊர்களில் அவர்களுக்காக மோட்ச தீபமும் ஏற்றப்பட்டதை காணமுடிந்தது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், சிங்கப்பூர் உள்பட பல நாடுகள் பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளன. பரம எதிரியான பாகிஸ்தான் நாட்டின் ராணுவம் கூட இரங்கல் தெரிவித்து இருக்கிறது.

ஆனால், இங்குள்ள சில மனிதநேயம் மரித்து போனவர்கள் சமூக வலைத்தளங்களில், வீரமிக்க பெருமை மிகு, நமது முப்படைகளின் தளபதியின் மரணத்தை கொச்சைப்படுத்துவதுபோல் கருத்துகளை பதிவிட்டு, தங்களது முகத்தில் தாங்களே கரியை பூசிக்கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.

தங்களை அன்னிய சக்திகளின் கைக்கூலிகள், அடிமைகள் என்பதையும் அவர்கள் வெளிச்சம் போட்டி காட்டியுள்ளனர். அவற்றை படிக்கும்போது, நெஞ்சம் கொந்தளிக்கிறது.

அதில் சிலர் அனுதாபம் தெரிவிக்கும் போர்வையில், தங்களது தீய சிந்தனைகளையும் கெட்ட நோக்கத்தையும் வெளிப்படுத்தியதை காண முடிகிறது.

அதுவும், பிபின் ராவத் மரணமடைந்தது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், இந்த பதிவுகள் பெரும்பாலானவை போடப்பட்டுள்ளன என்பதுதான், இங்கே கவனிக்க வேண்டியது.

அவற்றில், 'சர்ச்சைக்கு உள்ளாகாத ராணுவ தளபதி விபத்தில் சிக்கி இறந்துட்டார்னா, அச்சச்சோன்னு உச்சுக்கொட்டலாம், வீர வணக்கம் செலுத்தலாம். ஆனா தனக்கான ராணுவ வேலைய கவனிக்காம, ராணுவ ஆட்சி வந்து விடுமோனு பயப்படுகிற அளவுக்கு ஆளுங்கட்சிக்கு சொம்பா மாறின தளபதி விபத்தில் சிக்கினா மக்கள் அனுதாபப்பட மாட்டார்கள்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் போராடியபோது மாணவர்கள் தவறான திசையில் வழி நடத்தப்படுகின்றனர் என, ராணுவ மரபை மீறி அரசியல் கருத்து கூறி ராணுவ அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் விமர்சனத்துக்கு ஆளாகி அறியப்பட்டவர் பிபின் ராவத்; ஆழ்ந்த இரங்கல்.

நண்பர்களே தெய்வீகத்தின் தலையீடு!அப்பாவி மக்களை காக்கை குருவிகளைப்போல் கொன்று குவித்தபோது பல்லிளித்த ஜனநாயகம் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது விதைப்பதே விளையும்…

இதில் வேடிக்கை என்னவென்றால், பொதுவெளியில் தங்களது கருத்துகளை பதிவிட்ட இவர்களில் பலர், தங்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவாகி விடுமோ என்று நடுநடுங்கி பயந்தாங்கொள்ளிகள் போல் தங்களின் பதிவை, பின்தொடர்பவர்கள் மட்டுமே பார்க்கும்படி உடனடியாக பிளாக் செய்தும் விட்டனர்.
Latest Tamil News
இப்படி பல புல்லுருவிகள் தெரிவித்துள்ள கருத்துகள் ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து மக்கள் தரப்பில் கூறுகையில், 'தாய் நாட்டை கேலி செய்பவன், இந்த நாட்டிலேயே வாழத் தகுதியற்றவன். இப்படியொரு துயரம் நடந்து விட்டதே என்று நாட்டு மக்கள் வேதனையில் மூழ்கி இருக்கும் நிலையில், இதுபோல் தேசத்திற்கு எதிராக கருத்துகளை பதிவிடும் புல்லுருவிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம், அவசியம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ளது' என்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (165)

 • N.G.RAMAN - MADURAI,இந்தியா

  நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற தேசவிரோத செயல்களை தடுக்க முடியும்

 • Narayanan - chennai,இந்தியா

  இவர்களை என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின் . அவரின் போலீஸ் , நீதிபதிகள் என்ன செய்வார்கள்?

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  உண்மை சொன்னா தேச துரோகி ன்னு தான் சொல்வாங்க. உண்மைக்கு மதிப்பு கிடையாது. பணம் மற்றும் அதிகாரம் எங்கு இருக்கோ அவர்கள் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும் இந்த காலகட்டத்தில் அது வேத வாக்கு.

 • கு.ரா.பிரேம் குமார் பெங்களூர் -

  அவர்களது பதிவுகளை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம்

 • மணி - புதுகை,இந்தியா

  பீஜேபியை பிடிக்காது மோடியை பிடிக்காது என்றால் அவர்கள் மீதான வெறுப்பு அவர்களோடு முடியட்டும், தேசம் அனைவருக்கானது அது என்னவோ மோடிஜியுடையதுபோல நினைத்துக்கொண்ட முட்டாள்களின் செயல் இதுவென்று நினைக்கிறேன். எதற்காகவும் தேசப்பற்றை விட்டுக்கொடுக்கக்கூடாது, வாழ்க தமிழ்த்தாய் வெல்க இந்தியதாய்.

Advertisement