Load Image
dinamalar telegram
Advertisement

பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

Tamil News
ADVERTISEMENT
வெலிங்டன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Latest Tamil Newsவிபத்து நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ராணுவ வீரர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டு அணிவகுப்புடன், பேரக்ஸ் நாகேஷ் நினைவு சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவர்களது உடலுக்கு முப்படை அதிகாரிகள், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மக்கள் வரிசையாக சென்று மரியாதை செலுத்தினர்.
Tamil News
Tamil News
Latest Tamil Newsஇதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் கோவை சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து டில்லிக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. விபத்தில் இறந்த மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிகிறது.Latest Tamil News
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Comment Here வாசகர் கருத்து (8)

  • Pondy ponnu - Paris,பிரான்ஸ்

    so much for advertising about the armed forces by the present govt has resulted in such a shame. Atleast be honest from now on

  • விடியலை தேடி - அணில் புரம்,இந்தியா

    வேதனை தரும் நிகழ்வு இங்கும் அரசியல் செய்யும் சிலரை தூர வைத்து விட்டு நாம் இறையை பிரார்த்திப்போம்

  • Tamilan - NA,இந்தியா

    இந்தியா உலகத்தரத்தை மிஞ்சிவிட்டது என்று ஒரு புறம் பிரச்சாரம் நடக்கும் போது இதெல்லாம் அதற்க்கு வேட்டுவைக்காதா?

  • Tamilan - NA,இந்தியா

    இப்படித்தான் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளானது. வேறு பல VIP க்களும். இனியும் அரசு, உலகத்தரம் வாய்ந்த அரசுகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இன்று முப்படைகளின் தளபதிக்கே இந்த கதி. எதற்க்காக வானிலை மையம் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் செல்லும் பொது விஞ்சான பூர்வமாக வானிலையை அறிந்து கொண்டு செல்லவேண்டியதுதானே. இனியும் முப்படைகளுக்கும் தன்னிச்சையான வானொலி மைய சேவை கிடைக்கவில்லையா? இனியும் விஞ்சானம் இன்றுள்ள சூழலை சமாளிக்க ஆயிரம் பங்கு வளரவேண்டியுள்ளது.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    முப்படை தளபதிக்கு தமிழக ஆளுநர் நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேண்டாமா? வேறு என்ன முக்கியமான வேலை?

Advertisement