dinamalar telegram
Advertisement

உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை

Share
குன்னுார் : நேற்றிரவு குன்னுார் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ராணுவ அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் - பர்லியார் சாலை வழியாக முதல்வர் ஸ்டாலின் குன்னுாருக்கு, 8:45 மணிக்கு வந்தார். பின்னர், 8:55 மணியளவில் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு சென்றார். அங்கிருந்த ராணுவ உயர் அதிகாரி கலோன் என்பவரிடம் விபரங்களை கேட்டறிந்தார். பத்து நிமிடத்துக்கு பின் அங்கிருந்து குன்னுார் தாஜ் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றார்.
விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு இன்று மரியாதை செலுத்த உள்ளார். உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் 10ம் தேதி, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டாலின் புகழஞ்சலி:



குன்னுார் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லுாரிக்கு வந்த, முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ராணுவ அதிகாரிகளிடம், விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின், அங்குள்ள 'விசிட்டர்' பதிவேட்டில், 'தாய் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு, நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்' என, பதிவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • RandharGuy - Kolkatta,இந்தியா

    'தாய் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு, நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்' - தளபதி

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    ...ரொம்ப கஷ்டம் தான் நம பாடு

  • duruvasar - indraprastham,இந்தியா

    தேசப்பற்று மெய்சிலிர்க வைக்கிறது.

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    முன் மாதிரியான முடிவு... ஜால்ராக்களே.. இராணுவத்தை எந்த மாநில அரசும் கட்டுப்படுத்த முடியாது... முதல்வர் எல்லாம் டம்மி பீஸ்.. இராணுவ ஆட்சி என்பதை கேள்விபட்டதுண்டா?

    • jeyakumar - chennai,இந்தியா

      ராணுவத்தை மோடி கட்டு படுத்தலாம். என்ன எண்ணம் உங்களுக்கு

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    இதிலும் விளம்பரமா?......

Advertisement