dinamalar telegram
Advertisement

பிபிவின் ராவத் மறைவு : தலைவர்கள் இரங்கல்

Share
*துணிச்சல் மிகுந்தவர்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. துணிச்சல் மிகுந்த ஒரு மகனை தேசம் இழந்துவிட்டது. தாய்நாட்டிற்காக 40 ஆண்டுகள் அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை
போற்றுதலுக்கு உரியது.ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி


*உண்மையான தேச பக்தர்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது கடும் வேதனை அளிக்கிறது. ராணுவம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை நவீனமயமாக்குவதில் பெரும் பங்காற்றிய பிபின் ராவத், உண்மையான தேசபக்தர்; சிறந்த ராணுவ வீரர். அவரது மறைவு என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.நரேந்திர மோடி, பிரதமர்

*துணிச்சல் மிகுந்த வீரர்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களை இழந்துள்ளோம். இது தேசத்தின் சோகமான நாள். ராணுவத்திற்கான அவரது பங்களிப்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. துணிச்சல் மிக்க வீரரான அவர், பக்தியுடன் நாட்டிற்கு சேவை செய்தவர். அவரது இழப்பால் வேதனையில் உள்ளேன். அமித் ஷா,மத்திய உள்துறை அமைச்சர், - பா.ஜ.,

*எதிர்பாராத வேதனை


தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் பலியாயினர். இந்த எதிர்பாராத சம்பவம் ஆழ்ந்த வேதனை அளிப்பதாக உள்ளது. ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,

*சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியான சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்; எங்கள் எண்ணங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்கும்.ராகுல், லோக்சபா எம்.பி., - காங்.,

*வார்த்தைகள் இல்லை

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சோகமான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வருத்தத்தை வெளிப்படுத்த, என்னிடம்வார்த்தைகள் இல்லை. மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,


*குடும்பத்தினருக்கு இரங்கல்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். உயிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன்.ஜெகன்மோகன் ரெட்டிஆந்திர முதல்வர்,ஒய்.எஸ்.ஆர்., காங்.,


*கவலையை உருவாக்கியது


முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் உருவாக்கி உள்ளது. சரண்ஜித் சிங் சன்னிபஞ்சாப் முதல்வர், காங்.,

*தேசம் அதிர்ச்சியில் உள்ளது


முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தால் தேசம் அதிர்ச்சியில் உள்ளது. பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வர், பா.ஜ.,

*ஈடுசெய்ய முடியாத இழப்பு


முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோரின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இது, தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு; பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.நவீன் பட்நாயக்ஒடிசா முதல்வர், பிஜு ஜனதா தளம்


*அதிர்ச்சி அடைந்தேன்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர், தமிழகத்தில் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் எண்ணமும், வேண்டுதலும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்களுடன் இருக்கிறது.சந்திரபாபு நாயுடுதலைவர், தெலுங்கு தேசம்

*வருத்தமாக இருக்கிறது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவியுடன் பயணித்தஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்திமிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. அமரீந்தர் சிங் தலைவர், பஞ்சாப் லோக் காங்.,
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

    மூர்க்கர்கள் எப்படியெல்லாம் திசை திருப்ப நினைக்கிறார்கள் பாருங்கள்

  • abibabegum - madurai- Anna nagar,இந்தியா

    பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என நம்புகிறேன். விரைவில் மீண்டு வருவதற்கு வேண்டி கொள்கிறேன்-காங்கிரஸ் எம்.பி., ராகுல் லூசாயா நீ

  • sankaseshan - mumbai,இந்தியா

    தமிழ்நாடு அரசியல் வியாதிகள் குழப்ப குட்டையில் மீன் பிடிப்பவர்கள் அவர்களின் கருத்த்துக்கள புறம் தள்ள வேண்டும்

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    காங்கிரஸ் எம்.பி., ராகுல் பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என நம்புகிறேன். விரைவில் மீண்டு வருவதற்கு வேண்டி கொள்கிறேன் இன்னமும் சிறு பிள்ளைத்தனமா பேசினா எப்படி முடியல எங்கயாச்சும் ஒரு மூலேலே ஒக்காரவையா

  • SUBBU - MADURAI,இந்தியா

    இந்த இரங்கல் செய்தியில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்துதான் உண்மையாக அவர் உள்ளத்திலிருந்து வந்தது.

Advertisement