dinamalar telegram
Advertisement

தயார் நிலையில் கோவை மருத்துவமனைகள்

Share
கோவை: குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கும்படி கோவை மருத்துவமனைகளை ராணுவ அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
கோவையில் இருந்து சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் பின்னர்,தொடர் சிகிச்சைக்கு கோவையில் உள்ள மருத்துவமனைகளை மருத்துவ குழுவினர் தயாராக இருக்க ராணுவ மருத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கோவையில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

டாக்டர்கள் விரைவு



கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ எஸ் ஐ., மருத்துவமனையில் இருந்து 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூர் செல்கிறது. அதேபோல் இரு மருத்துவமனையிலும் அவசர நிலை கருதி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளன. சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஒன்று, ஜி.எச்.,குழு ஒன்று விரைகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Bandari Lal - Kanpur,இந்தியா

    ஏன்? பிண பரிசோதனைக்கா?

  • sivan - seyyur,இந்தியா

    கோவை அரசு மருத்துவமனையில் என்ன வசதி உள்ளது?

    • Bandari Lal - Kanpur,இந்தியா

      தெரியாதா? எறிஞ்சி கருகி செத்தவனா உயிர் கொடுத்துக்கூற வசதி இருக்கு. கேள்வியா கேக்குறே?

Advertisement